வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 மார்ச், 2010

ஜெனரல் சரத் கையடக்கத் தொலைபேசி பாவிக்க அனுமதி : இராணுவப் பேச்சாளர்

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குக் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



பொன்சேகாவின் பாரியார் தனது கணவரைப் பார்க்கச் செல்லும்போது கையடக்கத் தொலைபேசியைக் கொண்டு செல்லலாம் என்றும் தனது பிள்ளைகளுடன் மாத்திரம் கதைப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அடிப்படை வசதிகளற்ற நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா கையடக்கத் தொலைபேசி உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இன்று திங்கட்கிழமை மாலை அவரது மனைவி சந்திக்கச் செல்லவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி, கொழும்பு ஹைட் பார்க்கில் தற்போது எதிர்ப்புக் கூட்டமொன்று நடைபெறுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’