நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க வேண்டுமென ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹக்மன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அச்சம் பயமின்றி வாழக் கூடிய ஓர் சூழ்நிலையை ஜனாதிபதி அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுத்தள்ளதாக அவர் அங்கு தெரிவித்தார். எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் பொறுப்புணர்ச்சியுடன் வாக்களிக்க வேண்டுமென்பதுடன் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதியே தாம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டதாக அவர் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ள உள்ள முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது அனைத்து பிரஜைகளினதும் முக்கிய கடமையாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’