-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
திங்கள், 8 மார்ச், 2010
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றததைத் தொடர்ந்து இந்திய இலங்கைக்கு இடையிலான உறவு புதிய பரிமாணத்தின் கீழ் சக்திமயப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தபின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தாம் இந்தியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக செயற்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவு சிறப்பாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இந்த முறை பொதுத்தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் முன்வந்துள்ள நிலையில் இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் மத்தியில் ஜனநாயகப்பரம்பல் குறித்து தெளிவுப்படுத்துவதாக நிருபமா ராவ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’