
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதிக்கு முன்னர் இந்த விபரங்கள் அரசிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் செயற்படும் ஊடகத்துறையின் அமைச்சகமே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.1988 ஆம் ஆண்டு இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையிலேயே ஊடகத்துறையினரிடம் இந்த விபரங்கள் கோரப்பட்டுள்ளன.
ஊடக உரிமையாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளோர் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்று அரசின் உத்தரவு கூறுவதாக ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.
![]() | ![]() ![]() |
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் ஊதியத்தை தவிர அவர்களுக்கு வேறு ஏதாவது வகையில் வருமானம் வருகிறதா என்பதை கண்டறியக் கூட இந்த விபரங்களை அரசு கோரியிருக்கலாம் என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
எனினும் நாட்டிலுள்ள அனைவரும் அரசின் சட்டங்களுக்கு பணிந்து செயற்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் ஊடகவியலாளர்களும் அரசின் உத்தரவுக்கு ஏற்ப நடப்பதில் தவறில்லை என்றும் பிரபாகன் கூறுகிறார்.
ஊடகவியலாளர்கள் சொத்து விபரங்களை வெளியிட்ட பிறகு ஏதாவது நெருக்கடிகள் உருவாகுமானால் அப்போது அதை ஊடகங்கள் எடுத்துக் கூறலாம் என்றும் தான் கருதுவதாக பிரபாகன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’