எல்.ஆர்.ஏ.வினால் தாக்கப்பட்ட ஒருவர் |
ஆப்பிரிக்காவில் செயற்படும் பல கிளர்ச்சிக் குழுக்கள் பல இலக்கின்றி செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. வெற்றிபெறுவது கூட அவர்களது இலக்கல்ல என்றுகூட இவற்றின் மீது விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
காங்கோவில் முன்னூறுக்கும் அதிகமானோர் எல்.ஆர்.ஏ. என்ற ஆப்பிரிக்க ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இப்படியான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன.
ஒரு போரில் ஈடுபடும் இரு தரப்பும் வெற்றியை நோக்கமாகக் கொண்டுதான் சண்டையிடுகின்றன என்பது சரித்திரப் புத்தகங்களும், ஆங்கிலப் படங்களும் தூக்கிப்பிடிக்கின்ற ஒரு கருத்து. பொதுமக்களை ஆக்கினைக்கு உள்ளாக்கியும், விவசாயிகளிடம் இருந்து திருடியுந்தான் அவர்கள் தமது காலத்தைக் கடத்துகிறார்கள். |
ஆப்பிரிக்காவில் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காக நடத்தப்பட்ட போர்களும் அந்த வகையைச் சேர்ந்தவைதான்.
ஆனால் அண்மைய காலத்தில் ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்கின்ற பல மோதல்களைப் பொறுத்தவரை, உண்மையிலேயே வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆரம்பித்தார்களா என்ற சந்தேகம் ஏற்படவே செய்கிறது.
எல்.ஆர்.ஏ நடவடிக்கையால் இடம்பெயரும் மக்கள் |
அப்படிப்பட்டக் குழுக்களின் கொடூரமான நடவடிக்கைகள் கூட, குழப்பங்களால் பலனைப் பெற்றுக்கொள்வதற்காகவும், தமது இருப்பை நிலைப்படுத்திக்கொள்வதற்காகவும் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
லார்ட்ஸ் ரெஸிஸ்டன்ஸ் ஆர்மி
வடக்கு உகண்டாவில் இருக்கின்ற அக்கோலிஸ் என்ற இனத்தவரின் பிரதிநிதிகள் தாங்கள் கூறிக்கொண்டுதான் எல்.ஆர்.ஏ. என்றழைக்கப்படுகின்ற லார்ட்ஸ் ரெஸிஸ்டன்ஸ் ஆர்மி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
விவிலியக் கதைகளில் வரும் பத்துக் கட்டளைகளை தாம் பின்பற்றுவதாகத்தான் அவர்கள் கூறிக்கொண்டார்கள்.
ஆனால் பொதுமக்களை ஆக்கினைக்கு உள்ளாக்கியும், விவசாயிகளிடம் இருந்து திருடியுந்தான் இவர்கள் தமது காலத்தைக் கடத்துகிறார்கள். தாம் இருக்கின்ற பகுதிகளில் உள்ள அரசாங்கங்களின் பலவீனத்தின் அடிப்படையில்தான் இவர்களது இருப்பு நீடிக்கிறது.
ஆப்பிரிக்காவில் உள்ள பல குழுக்களைப் போன்று இவர்களையும் வேறு வழி இல்லாமல்தான் 'கிளர்ச்சிக்காரர்கள்' என்ற பதத்தைக் கொண்டுதான் அழைக்க வேண்டியுள்ளது.
எல்.ஆர்.ஏ. ஆயுதக் குழுவினர் |
ஆனால் ஒரு உண்மையான இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துவிட்டால், இந்த அமைப்புகள் கலைந்துபோய்விடும். ஏனென்றால், அத்தகைய இராணுவங்களுடன் நின்று பிடிக்கும் அளவுக்கு இவற்றுக்கு தைரியம் கிடையாது.
காங்கோ, தெற்கு சுடான் மற்றும் மத்திய ஆப்பிரிக்க குடியரசு போன்ற பல இடங்களில் இந்த எல்.ஆர்.ஏ செயற்படுகின்றது. உண்மையிலேயே அங்கீகரிக்கப்பட்ட இராணுவங்களையோ அல்லது எல்லைகளை நன்கு கண்காணிக்கும் படைகளையோ இந்த நாடுகள் கொண்டிருக்கவில்லை.
காணாமல் போன புரட்சிகர ஐக்கிய முன்னணி
1990களில் சியாரோலியோனில் ஒரு குழு செயற்பட்டுவந்தது. 'புரட்சிகர ஐக்கிய முன்னணி' என்பது அதன் பெயர். அதுவும் நாட்டில் நிலவிய குழப்பங்களால் பலன் அனுபவித்துவந்த ஒரு குழுதான். சியாரோலியோனில் ஒரு நம்பிக்கையான தேசிய பாதுகாப்புப் படையை ஆரம்பிக்க அரசாங்கம் சிறிய ஆதரவை வழங்கியபோது, இந்த குழு முற்றுமாக காணாமல் போய்விட்டிருந்தது.
மத்திய ஆப்பிரிக்காவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த பகுதிகளில் செயற்படுகின்ற பல குழுக்களுக்கும் இந்த உதாரணம் பொருந்தும். அவை உண்மையில் போர்களை நடத்தவில்லை. மக்களுடன் சண்டையிட்டு, அவர்களுக்கு ஆக்கினைதான் கொடுத்துவருகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’