வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 மார்ச், 2010

சட்ட ஒழுங்கு கெடும் ; படித்தவர் என்பது ஏற்புடையதல்ல ; நளினியை விடுவித்தால் விபரீதம் என்கிறது தமிழக அரசு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி முக்கிய குற்றம் புரிந்துள்ளார் என்றும் இவரை விடுவித்தால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் எனவே விடுதலை செய்ய இயலாது என்றும் , இது தொடர்பான ஆலோசனை குழு அறிக்கையை அப்படியே ஏற்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் நளினி விடுதலை கனவு இத்துடன் முடிகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பதால், முன்கூட்டியே தன்‌னை விடுதலை செய்ய வேண்டும் என அரசிடம் நளினி கோரினார். இந்த மனுவை அரசு நிராகரித்து விட்டது.

இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், முன் கூட்டி விடுதலை செய்ய கோருபவரின் மனுவை பரிசீலிக்க சட்டப்படி ஆலோசனைக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி மனு தாக்கல் செய்தார். முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி நளினியும் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், முறைப்படி ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. இக்குழு கூடி நளினி விடுதலை தொடர்பாக விசாரணை நடத்தியது.
கடந்த வாரம் கோர்ட்டில் நடந்த வாய்தாவில் நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழுவின் அறிக்கை அரசுக்கு வந்திருப்பதாகவும், சீலிட்ட கவரில் அதை தாக்கல் செய்வதாகவும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அறிக்கையின் நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கோர்ட்டில் கூறியதாவது:
ஆலோசனைக் குழுவின் அறிக்கையை அரசு பெற்றுள்ளது. அதை அரசு பரிசீலித்து வருகிறது. இந்த அறிக்கை, அரசை கட்டுப்படுத்தாது. ஆலோசனைக் குழுவிடம் மேலும் சில விவரங்களை உள்துறை கோரியிருப்பதாக அறிகிறேன். அரசு இந்த விஷயத்தில் முடிவெடுக்கும். அதற்கு இரண்டு வார கால அவகாசம் வேண்டும். அதற்கு முன், அரசு முடிவெடுத்தால், கோர்ட்டுக்கு தெரிவிக்கிறேன்.இவ்வாறு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் கூறினார்.பின், சீலிடப்பட்ட கவரை கோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் சமர்ப்பித்தார். இதன்படி நீதிபதிகளும் விசாரணையை 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை இன்று ( திங்கட்கிழமை ) நடந்தது. நளினி விடுதலை செய்யப்படுவாரா என நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கில் இன்று ஆஜரான அட்வகேட் ஜெனரல் ராமன் ஆலோசனைக்குழுவின் பரிந்துரையை பரிசீலித்து ஆராய்ந்தோம் . இதனை நாங்களும் அப்படியே ஏற்று நளினியை விடுதலை செய்ய இயலாது என்றார். தொடர்ந்து விசாரணை நடந்தது.
ஆலோசனை குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன ? :

கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆலோசனைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு :

1. நளினி ராஜிவை கொலை செய்ய உதவியாக இருந்திருக்கிறார்.
2. இந்த கொலை வழக்கில் இவரது முக்கிய தன்மை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
3 . குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்
4. சதித்திட்டத்தில் முக்கிய பங்கு உண்டு.
5. கொலை நடந்த விஷயத்தில் விவரம் அனைத்தும் நளினிக்கு தெரியும்.
6. கணவர் இல்லை என ஏற்க முடியாது . இவர் மரணத்தண்டனை பெற்று சிறையில் தண்டனை அநுபவித்து வருகிறார்.
7. அதிக கல்வி தகுதி உள்ளவர் என்பதற்காக அவர் ஒழுக்கத்துடன் நடப்பார் என்பது ஏற்க முடியாது.
8. இது வரை நளினி வருத்தமோ ஒப்புதலோ தெரிவிக்கவில்லை.
9. இவர் விடுதலை செய்யப்பட்டால் தாயாருடன் சென்னை ராயப்பேட்டையில் தங்கி இருப்பேன் என்பதும் நம்பும்படியாக இல்லை . அதே நேரத்தில் அங்கு முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடம். அத்தோடு சென்னையில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.

10. இவர் 18 வருடம் சிறையில் இருந்தார் என்பதை எற்று விடுதலை செய்ய முடியாது.
இந்த அறிக்கையை பரிசீலித்து இதன்படி தமிழக அரசும் இந்த அறிக்கையை அப்படியே ஏற்று கொள்கிறது என தமிழக அரசு வழக்கறிஞர் சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’