வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 மார்ச், 2010

இந்தோனேசிய தமிழ் அகதிகள் இந்த வாரம் சவால்களை சந்திக்கலாம்

இந்தோனேசியாவின் மராக் துறைமுகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 240 பேரும், இந்த வாரம் சவால்களை சந்திக்கலாம் என அவுஸ்திரேலிய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் அது நாடு
கடத்தப்படக்கூடிய சவாலா என்பதை பற்றியோ அல்லது வேறு எந்த தகவலையோ அந்த இணையம் வெளியிடவில்லை.
கடந்த வருடம், செப்டம்பர் மாதமளவில் அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இந்த படகை, அவுஸ்திரேலிய பிரதமரின் தொலைபேசி அழைப்பை அடுத்து, இந்தோனேசியா தடுத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதன் போது இந்த படகில் 254 பேர் இருந்தனர். எனினும், அதன் பின்னர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 28 வயதுடைய இளைஞர் ஒருவர் வயிற்றுளைவு காரணமாக மரணமானார். அத்துடன் சில காலங்களில், 8 பேர் படகில் இருந்து இறங்கிய போதும் அவர்களின் நிலமை இதுவரையில் வெளிப்படாமல் உள்ளது.
அவர்களின் பேச்சாளராக செயல்பட்டு வந்த அலெக்ஸ் என்பவரும், நாளடைவில் தலைமறைவானார். அவர் இந்தோனேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகி வருகின்ற போதும், உறுதியான தகவல்கள் எவையும் இல்லை.
இதற்கிடையில், அவர்களை அவுஸ்திரேலியாவிற்கு கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கப்டன் பிரேம் என்பவர், குறைந்த அபராதத்துடன், 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 30க்கும் அதிகமான சிறுவர்களுடன் ஒரே படகில் வசிக்கின்ற இலங்கையர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரே கழிவறையை பயன்படுத்தி வரும் அவர்கள், முறையான சுகாதார வசதிகள் இன்றி, பல்வேறு நோய்களுக்கு ஆளாவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிரச்சினைக்கு மற்ற நாடுகளை காரணம் காட்டி இந்தோனேசிய அரசாஙகம் கைவிடும் அதேவேளை, சட்டத்தை காரணம் காட்டி அவுஸ்திரேலியா கைவிட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’