பாகிஸ்தானி ஒருவரை கொன்ற 17 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட ஓர் தகராறின் விளைவாக பாகிஸ்தானியர் ஒருவரைக் கொன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள 17 இந்தியப் பிரஜைகளுக்கு ஷார்ஜா நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
எமிரேட்டுகளில் மிக அதிகமானோருக்கு மரண தண்டனை கிடைத்துள்ள வழக்கு இதுதான் என்றும் கருதப்படுகிறது.
பாகிஸ்தானியப் பிரஜை ஒருவரை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்திக் கொன்ற இந்த சம்பவத்தில் மொத்தத்தில் 50 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருந்ததது.
போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் ஏனையோர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
தண்டனைக்குள்ளாகியிருக்கும் 17 பேரும் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான குற்றக்கும்பல் வன்முறை அதிகரித்துவருவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’