வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 மார்ச், 2010

ஆயுள் தண்டனை தமிழ் கைதிக்கு இன்று மகசீன் சிறைச்சாலையில் திருமணம்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் சிறைக் கைதி ஒருவர் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இந்த அபூர்வ திருமண நிகழ்வு நடைபெற்றது.
மஸ்கெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான ராமய்யா ரவீந்திரன் என்பவரே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான மாதவன் ரஞ்சனி என்ற யுவதியை, ரவீந்திரன் கரம்பிடித்தார்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திருமண நிகழ்வில் பிரதி அமைச்சர் பெ. இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட காரணத்திற்காக குறித்த ராமய்யா மாதவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’