வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 மார்ச், 2010

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு சக்திகளினால் விசாரணை நடத்த அனுமதியளிக்கப்பட மாட்டாது : சமரசிங்க

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிநாட்டு சக்தகிளினால் விசாரணை நடாத்த எந்த  வழியிலும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என இடர்முகாமைத்துவ மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரகமவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கில் இடம்பெற்ற மனிதாபிமான மீட்புப் பணிகளின் போது எந்தவிதமான மனித உரிமை மீறல் சம்பவங்களும் இடம்பெற ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடித்த அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் பாராட்டைத் தெரிவிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’