பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் ரியலிட்டி டெலிவிஷன் ஷோ மூலம் அவர் தனக்கு பிடித்த பெண்ணை மணக்க திட்டமிட்டு இருக்கிறார் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்.
கடந்த காலங்களில் யுவராஜ்சிங் இந்திப்பட நாயகிகளான கிம்சர்மா, தீபிகா படுகோனயுடன் பரவலாக கிசுகிசுக்கப்பட்டார் ஆனால் யாரையும் அவர் திருமணம் செய்யவில்லை.மேற்படி தொலைக்காட்சியின் முதலாவது ரியாலிட்டி ஷோ 2009ஆம் ஆண்டு நடந்தது. இதில் நடிகை ராக்கிசாவந்த் தனது கணவரை தெரிவு செய்தார். சமீபத்தில் பிரமோத் மகாஜனின் மகன் ராகுல்மகாஜன் இந்த ஷோவில் பங்கேற்று மணப்பெண்ணை தேர்வு செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் யுவராஜ்சிங் தனது அதிரடி துடுப்பாட்டம் மூலம் இளம் ரசிகைகளின் இடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர். அடுத்து நடைபெறும் ரியாலிட்டி ஷோவில் யுவராஜ்சிங் பங்கேற்பார் எனவும் நம்பப்படுகிறது. ,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’