![]() | |
| பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் |
‘’இராக்கிற்கு படையனுப்பியது சரியான நடவடிக்கையே’’ : கோர்டன் பிரவுன்
இராக் யுத்தம் தொடர்பாக பிரிட்டனில் நடந்துவரும் விசாரணையில் இன்று வாக்குமூலம் அளித்த பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், யுத்தத்துக்கு செல்வதாக எடுக்கப்பட்ட முடிவுதான் சரி என்றும், சரியான காரணங்களுக்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார்.
உலக அமைதிக்கு இராக் ஒரு அச்சுறுத்தலாக உருவெடுத்துவருகிறது என்று உளவுத் தகவல்கள் சுட்டிக்காட்டின என்றும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது என்றும் கோர்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
படையெடுப்பின் போது நிதியமைச்சராக இருந்தவரான பிரவுன், ஆயுதப் படைகள் மீது தான் நிதிச் சிரமங்களை ஏற்படுத்தவில்லை என்றும் பிடிவாதமாக மறுத்துள்ளார்.
மாவோயிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இந்தியாவில் தீவிர படைநடவடிக்கை
![]() | |
| இந்தியப் படையினர் |
ஆபரேஷன் கிரீன் ஹண்ட் என்ற இந்த இராணுவ நடவடிக்கையில் ஏற்கனவே ஈடுபட்டுவருகின்ற ஐம்பத்தைந்தாயிரம் துருப்பினர் மற்றும் பொலிசாருடன் கூடுதலாக 14 ஆயிரம் துருப்பினர் சேரவிருப்பதாகத் தெரிகிறது.
இந்திய அரசாங்கத்துடன் பேசத் தயார் என்று மாவோயியத் தலைவர்கள் சென்ற மாதம் கூறியிருந்தனர். ஆனால் மாவோயியவாதிகள் முதலில் தமது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தியாவில் கடந்த இருபது வருடங்களில் மாவோயிய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜீரிய பொலிசாரின் சட்டமீறல்கள் குறித்து அந்நாட்டு அரசு கண்டனம்
![]() | |
| நைஜீரிய பொலிசார் |
பொலிஸ் மா அதிபரை தனது அலுவலகத்துக்கு அழைத்த பொலிஸ் விவகார அமைச்சர், பொலிஸாரின் கொடூரத்தனம் குறித்து அவரிடம் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தனது சகாக்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் பணியாற்ற வேண்டியிருப்பதாக பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.
மோசமான குற்றச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, நிராயுதபாணிகளான மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது ஆகியவற்றைக் காண்பிப்பதாகக் கூறப்படும் தொலைக்காட்சி படங்கள் வெளியானதை அடுத்தே இந்த விமர்சனங்கள் வந்துள்ளதாக நைஜீரியாவில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
‘’பாலியல் விவகாரம்’’ – பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட இருவர் பதவி நீக்கம்
![]() | |
| சென் பீட்டர்ஸ் சதுக்கம் |
பாப்பரசரின் முக்கிய விருந்தாளிகளை வாழ்த்தும் பணிகளையும் உள்ளடக்கிய கடமையைச் செய்யும் அங்கலோ பல்டுச்சி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் உறுதி செய்துள்ளது.
வேறு ஒரு ஊழல் தொடர்பாக தாம் பல்டுச்சியின் தொலைபேசியை ஒற்றுக்கேட்ட போது, இந்த பாலியல் ஊழல் குறித்த தகவல்களை தாம் அறிந்து கொண்டதாக இத்தாலிய பொலிஸார் கூறுகிறார்கள்.
போஸ்டர்கள் கட் அவுட்கள் அகற்றப்பட வேண்டும்: இலங்கை தேர்தல் ஆணையம் உத்தரவு
![]() | |
| ஜனாதிபதித் தேர்தலின்போது பிரச்சார கட்-அவுட்கள் ஏராளம் காணப்பட்டிருந்தன |
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இப்படிப்பட்ட தேர்தல் ஒழுங்கு விதிகள் பரவலாக மீறப்பட்டிருந்தன என்பதையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சி அலுவலகங்கள் அல்லது தேர்தலுக்கு முன்னரான கூட்டங்கள் நடக்கும் இடங்களில் மாத்திரந்தான் இப்படியான கட்-அவுட்டுகள் வைக்கப்பட முடியும் என்பது விதி.
ஆனால், இந்த விதிகள் அங்கு வகைதொகையின்றி - குறிப்பாக அரசாங்க கட்சியினரால் மீறப்படுகின்றன.
அரசாங்க கட்சியினரின் சுவரொட்டிகள் நாடெங்கும் சுவர்களில் காணப்படுகின்றன. குறிப்பாக அந்தந்த தலைவர்களின் சொந்த இடங்களை இலக்குவைத்து அவை ஒட்டப்பட்டிருக்கின்றன.
தென்னிலங்கையை எடுத்துக்கொண்டால், அங்கு அதிபர் ராஜபக்ஷ அவரது சகோதரர்கள், அவரது மகன் ஆகியோரது சுவரொட்டிகள் அனைத்து தெருக்களையும் அலங்கரிக்கின்றன. இவர்கள் அனைவரும் அரசியலில் இருக்கிறார்கள்.
அனைத்து புகைப்பட சுவரொட்டிகளும் அகற்றப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த தேர்தலில் அவர் ஒரு வேட்பாளராக இல்லாத போதிலும், அவரது சுவரொட்டிகள்கூட தெருக்களில் பிரசன்னமாக இருப்பது தார்மீக அடிப்படையில் சரியல்ல என்றும் ஒரு தேர்தல் அலுவலக அதிகாரி பிபிசியிடம் விளக்கினார்.
இந்த மாதிரியான ஆட்சேபணைக்கு உரியவற்றை அகற்றுவதற்காக ஆட்கள் பணிக்குச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் இந்த வார இறுதி முதல் அகற்றுவதில் பொலிஸாருக்கு உதவுவார்கள் என்றும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான பிரிசாந்த ஜயக்கொடி கூறுகிறார்.
ஆனால், இது ஒன்றும் இலகுவான காரியமல்ல என்பதை தேர்தல் ஆணையமும், பொலிசாரும் ஒப்புக்கொள்கின்றனர்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் - பாட்டாளி மக்கள் கட்சியினர் இடையே பதற்றம்
![]() | |
| உ.ரா.வரதராஜன் |
அத்தாக்குதல் நடத்தப்பட்ட அரைமணி நேரத்தில் தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இரு தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது பதற்றம் தணிந்திருக்கிறது.
''வரதராஜன் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இந்த தகவல் உறுதியாகி உள்ளது'' என்றும் மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
சீனாவில் ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும்: சீனப் பிரதமர் உரை
![]() | |
| சீனப் பிரதமர் |
பெய்ஜிங் நகரில் ஆரம்பமாகியுள்ள தேசிய மக்கள் மாநாட்டில் உரையாற்றியபோது அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
சீனா தனது பொருளாதாரத்தை வெளிப்படைத்தன்மையுடன் கையாள வேண்டும் என்றும், உள்ளூரில் மக்களின் வாங்கும் திறன் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்றும் சீனாவில் சொந்த உயர் தொழில்நுட்ப தொழில்துறையை விருத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியின் பலாபலன்கள், அமைதியீனத்தை எதிர்கொண்டுள்ள பகுதிகளுக்கும் சமனாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களின் வருமானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறினார்.
சீன மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்ற கோபத்துக்குக் காரணமான ஊழலை ஒழிப்பதற்கு அதிக முயற்சிகள் எடடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
'குழந்தை வளர்ப்பு' வீடியோ கேமில் மூழ்கி சொந்தக் குழந்தையை 'பட்டினி போட்டு சாகடித்த' தென்கொரியப் பெற்றோர்
![]() | |
| அனிமா வீடியோ கேமிலிருந்து ஒரு காட்சி |
இந்தத் தம்பதியர் ஒவ்வொரு நாளும் 12 மணி நேரம் தொடர்ச்சியாக இணைய பாவனை நிலையம் ஒன்றில் நேரத்தைக் கழித்து வந்ததாகவும், குறைமாதத்தில் பிறந்த தமது சொந்தக் குழந்தைக்கு இவர்கள் ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமே சாப்பாடு கொடுத்து வந்தனர் என்றும் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள தென்கொரிய அரசு ஊடகமான யொன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.
சியோலுக்கு தெற்கே சுவியோன் என்ற ஊரில் கைதுசெய்யப்பட்டுள்ள நாற்பத்தொரு வயதுத் தந்தையும் 25 வயது தாயும் இந்த வாரத்தில் முன்னதாக தமது 5 மாதக் குழந்தை இறந்துவிட்டதை தெரிவித்திருந்தனர்.
இந்தக் குழந்தை மீது நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனை அது பல நாட்கள் போதிய உணவு கிடைக்காததினாலும் போஷாக்கின்மையாலும் உயிரிழந்துள்ளதாக காட்டியுள்ளது.
இக்குழந்தை பசியால் வாடிய காலகட்டத்தில், பெற்றோரோ இணைய தளத்தில் நிஜமல்லாத கற்பனைக் குழந்தை ஒன்றை வளர்ப்பதில் தீவிரமாக இருந்து பொழுதைக் கழித்துவந்துள்ளனர்.














தமிழோசை






0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’