வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 மார்ச், 2010

ரஞ்சிதா ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ?


பெங்களூர்: நித்யானந்த சாமியார்-ரஞ்சிதா செக்ஸ் வீடியோ காட்சிகள் வெளியானது எப்படி என்பது குறித்து பல்வேறு விதமான வதந்திகள் செய்திகளாக உலா வருகின்றன.

வதந்தி 1:

இந்த வீடியோவை எடுத்தவர்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த ஊழியர்களே. சாதாரண பக்தையாக ஆசிரமத்துக்குள் நுழைந்த ரஞ்சிதா, கிடுகிடுவென நித்யானந்த சாமியாரின் அந்தரங்க அறைக்குள் புகுந்து அவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் அளவு சக்தி மிக்கவராக மாறியதால் கடுப்பான, சாமியாரின் முன்னாள் அந்தரங்க தோழி ஒருவர் செய்த வேலைதான் இது என்கிறார்கள்.

வதந்தி 2:

கர்நாடகத்தைச் சேர்ந்த விவிஐபிக்கும் நித்யானந்தாவுக்கும் ரியல் எஸ்டேட் பிஸினஸில் மகா போட்டி. இதனால் கடுப்பான விவிஐபி, ஆசிரமத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு பெண்மணிக்கு கணிசமாகப் பணம் கொடுத்து, இந்த காம லீலைகளை படம் பிடித்துவிட்டாராம்.

வதந்தி 3:

கணவனைப் பிரிந்த ரஞ்சிதா, ஒரு யோகா வீடியோவுக்காக நித்யானந்தனின் ஆசிரமத்துக்குச் செல்ல, சாமியாரின் திரண்ட சொத்துக்களைக் கண்டு கொஞ்சம் மிரண்டு போய்விட்டாராம். சாமியாரின் பிரமச்சரியமும் ரஞ்சிதாவின் வனப்பில் கொஞ்சம் ஆடித்தான் போனதாம். இருவரும் கிட்டத்தட்ட கணவன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த, ஒரு கட்டத்தில் சாமியாரை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, தனக்கு மிக நெருக்கமான ஒரு பெண் மூலம் இந்த வீடியோவை எடுக்க வைத்தாராம். அந்தப் பெண்ணோ இந்த வீடியோவை வைத்து 'டபுள் கிராஸ்' செய்துவிட, விஷயம் வெளியில் வந்து நாறிப்போனதாம்.

இப்படி பல விதமான விதவிதமான யூகங்களும், வதந்திகளும் செய்திகளாக வலம் வருகின்றன.

இந்த மூன்று வதந்திகளிலுமே, ரஞ்சிதா தவிர்த்து, முகம் தெரியாத பெண் ஒருவர் பெரும் வில்லியாக வந்து போகிறார். யார் அந்தப் பெண் என்பது இன்னும் ஓரிரு நாளில் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் இந்த விவகாரத்தை 'ஆழ்ந்து ஆராய்ந்து' வருவோர்.

அந்தப் பெண் யாரோ?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’