
ராஜபக்ஷ குடும்பத்தினர் அரசியலைப் பயன்படுத்தி முறையற்ற விதத்தில் பணம் சம்பாதிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பிரதான வேட்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தாருக்கு பாரியளவு சொத்துக்கள் காணப்படுவதாக சிலர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் முறையற்ற வகையில் தமது குடும்ப உறுப்பினர்கள் ஓர் தேனீர் கடையைக் கூட வைத்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமது சொத்துக்களையும் மக்கள் சேவைக்காக விற்பனை செய்த தமது தந்தையின் தூய அரசியல் பாதையை தாம் பின்பற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வத்தளைப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’