வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 மார்ச், 2010

சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளிக்க நிபுணத்துவ மருத்துவர் குழாமிற்கு அனுமதியளிக்க வேண்டும் : ஐ.தே.க

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு, நிபுணத்துவ மருத்துவர் குழாமிற்கு அனுமதியளிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான காரணத்தினால் பொன்சேகாவிற்கு கூடுதலான மருத்துவ பராமரிப்பு இன்றியமையாததென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடல் நிலை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனரல் பொன்சேகா வழமையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் மருத்துவர்களினால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும், இதுவே மருத்துவ தர்மம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய வீரராக போற்றப்பட வேண்டிய நபர் ஒருவருக்கு மனிதாபிமானமற்ற ரீதியில் தண்டனை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’