வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 மார்ச், 2010

அவுஸ்திரேலியாவில் 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட 3 தமிழர்கள் இன்று விடுதலை _

விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்களை அவுஸ்திரேலிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றின் பெயரில் இம்மூவரும் நிதி சேகரித்து விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியதாக அவுஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வேமவுண்ட் தெற்கைச் சேர்ந்த தமிழ் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சிவராஜா யாதவன்(வயது 39), மவுண்ட் வவெர்லியச் சேர்ந்த அரூரன் விநாயகமூர்த்தி(வயது 35) மற்றும் சிட்னியைச் சேர்ந்த கணக்காளரான ஆறுமுகம் ரஜீவன்(வயது 43) ஆகியோரே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் தலா 1மில்லியன் டொலர்களை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
இவர்களுள் விநாயகமூர்த்தி என்பவர் குண்டுகளை வெடிக்கச் செய்வதற்கும், செயலிழகச் செய்வதற்குமான இலத்திரனியல் உதிரிப்பாகங்களை விடுதலை புலிகளுக்கு செய்து வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலிய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி போல் கோங்லன் இன்று இம்மூவரையும் அவர்களின் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்துள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2007 ஆம் ஆண்டு இம்மூவரும் பயங்கரவாத முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு 25 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’