பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர் சேர் பீட்டர் ரெக்கட்ஸ், இன்று இலங்கைக்கு விஜயம் மெற்கொள்கின்றார்.
அவர் நாளை ,வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் பங்கேற்றமை தொடர்பில் இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் குறித்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ளும் முகமாகவே பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சின் நிரந்தர உதவிச் செயலாளர் சேர் பீட்டர் ரெக்கட்ஸ், இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’