இந்தோனேசியாவின் மெரேக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக ஏழு நாடுகளின் 13 குழுக்கள் இணைந்து, பல மாதங்களாக தீர்வு கிடைக்காத நிலையில் தங்கியுள்ள அவர்களுக்கு முறையான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து ஆதரவான அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, கனடா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, ஐக்கிய ராச்சியம் ஆகிய ஏழு நாடுகளின் 13 நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து இந்த கூட்டறிக்கையை விடுத்துள்ளன.
அவுஸ்திரேலியாவின் அகதிகள் நடவடிக்கை கூட்டு,
இந்தோனேசியாவின் வேலை செய்யும் மக்கள் சங்கம்,
ஐக்கிய ராஜ்யத்தின் தமிழ் சமூகம்,
நியூசிலாந்தின் சமூக பணியாளர்கள்,
நியூசிலாந்து சமூக கட்சி ,
மலேசியா, மனித உரிமைகள் கழகம்,
இந்தோனேசிய மனித உரிமைகள் சமூகம்,
தமிழர்களுக்கான நிவாரண வழங்கலுக்கான கனேடிய மனிதாபிமான விண்ணப்ப குழுமம்,
இந்தோனேசிய சட்ட உதவி நிறுவனம்,
இந்தோனேசிய நம்பிக்கை காங்கிரஸ்,
அகதிகள் உரிமை நிறுவனம் - பேர்த்,
தமிழர்களை காப்போம் என்ற தமிழ் அமைப்பு
என்பனவே இந்த அறிக்கையை விடுத்துள்ளன.
படகில் உள்ள தமிழர்களுக்கு சட்டரீதியான தீர்வு வழங்கப்பட வேண்டும், அவர்கள் புறந்தள்ளப்பட கூடாது, அவர்கள் விரைவில் குடியமர்த்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’