அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு மீண்டும் கூடியது. இன்று காலை நடைபெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்படுவது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 69 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 93 வாக்குகளும் எதிராக 24 வாக்குகள் அளிக்கப்பட்டன.
பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகளும் வாக்களித்தன.
ஐக்கிய தேசியக்கட்சி, ஜே வி பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியன பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
இந்த அவசரகால சட்ட நீடிப்புக்காக கடந்த மாதம் கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் இன்று கூட்டப்பட்டது.
இதேவேளை பொதுத்தேர்தல் பிரசாரங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளமையால் இன்றைய அமர்வுக்கு பெருமளவான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’