வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 மார்ச், 2010

நா.உறுப்பினர்கள் மாதச் சம்பளத்தை தேசத்திற்காக அர்ப்பணிக்க வேண்டும்: மேர்வின் சில்வா






நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது சம்பளங்களை தேசத்திற்காக அர்ப்பணிக்க வேண்டுமென தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மாதத்தில் ஒரே ஓருநாள் பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட்டமைக்காக சம்பளம் கோருவது நியாயமற்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாதத்திற்கான சம்பளத்தை தாம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று ஏனைய அனைவரும் தங்களது சம்பங்களை தியாகம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மை முன் உதாரணமாகக் கொண்டு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’