வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 28 மார்ச், 2010

ஆசிய நாடொன்றே பொன்சேகாவின் தேர்தல் பிரசாரத்திற்கு பணம் வழங்கியது : புலனாய்வுப் பிரிவினர்

ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஆசிய நாடொன்றே பணம் வழங்கியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் தெரிவித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் உறவினர்களது வங்கிக் காப்புப் பெட்டகங்களிலிருந்து 527,000 அமெரிக்க டொலர் பணத்தை அண்மையில் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியிருந்தமை யாவரும் அறிந்ததே.
கடந்த ஜனவரி மாதம் 26 ம் திகதி இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் குறித்த நாட்டைச் சேர்ந்த முக்கிய இராஜதந்திரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
குறித்த இராஜதந்திரியினால் வெளிநாட்டு நாணயங்கள், சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருக்கலாம் என புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், குறித்த பணம் மக்களிடமிருந்து தமக்குக் கிடைக்கப் பெற்றதாக சரத் பொன்சேகா விசாரணைகளின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’