-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
ஞாயிறு, 28 மார்ச், 2010
பான் கீ மூனின் விசேட பிரதிநிதி லியன் பாஸ்கோ வரும் வாரம் இலங்கை விஜயம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி லியன் பாஸ்கோ எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக படையினர் மேற்கொண்ட இறுதிக் கட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அவர் இலங்கை விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இராணுவ நீதிமன்றினால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள நபர் ஒருவரிடம் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திப்புக்களை நடாத்த ஒருபோதும் அனுமதிக்க முடியாதென அரசாங்கத் தரப்பு அறிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’