வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 28 மார்ச், 2010

வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் ஜூன் இறுதிக்குள் குடியேற்றப்படுவர்-வவுனியா அரசாங்க அதிபர் _

வவுனியா முகாம்களிலுள்ள சுமார் எண்பதினாயிரம் பேரும் எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் குடியேற்றப்பட்டுவிடுவரென நம்பிக்கை தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ்,
அடுத்தமாத இறுதிக்குள் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, வவுனியா வடக்குப் பகுதிகளிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் தொண்ணூறு சதவீதமான கிராமங்களில் மக்கள் குடியேற்றப்பட்டு விடுவரெனவும் கூறினார். வவுனியா அகதிமுகாம் மக்கள் மற்றும் அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்தத் தகவல்களை அவர் வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, வவுனியாவில் கடந்த காலங்களில் 20 முகாம்களில் 2,89,000 மக்கள் தங்கியிருந்தனர். ஆனால், தற்போது நான்கு முகாம்கள் மட்டுமே இயங்குகின்றன. இவற்றில் சுமார் 80 ஆயிரம் மக்கள் உள்ளனர். இவர்கள் சுதந்திர நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் எதிர்வரும் ஜூன் மாத மாத இறுதிக்குள் குடியேற்றப்பட்டு விடுவர். அகதி முகாம்களில் தற்போது தங்கியுள்ள மக்களில் அங்கவீனமுற்ற அனைவரும் எதிர்வரும் முதலாம்“ திகதி விடுவிக்கப்பட்டு அவர்கள் தங் களது சொந்த இடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓமந்தையில் தொழில்நுட்பக் கல்லூரி ஓமந்தையில் 500 மில்லியன் ரூபா செலவில் தொழில்நுட்பக் கல்லூரியொன்று அமைக்கப் படவுள்ளது. அதேபோன்று நெடுங்கேணியில் 100 மில்லியன் ரூபா செலவில் நீர்விநியோகத் திட்டமொன்றும் புதிதாக உருவாக்கப்படவுள்ளது.

வவுனியா பிரதேச மீள்குடியேற்றம்

வவுனியா பிரதேசத்திலுள்ள பாலமோட்டை, ஆறுமுகத்தான் புதுக்குடியிருப்பு, மாளிகை, மருதங்குளம்,இளமருதங்குளம், சேமமடு, ஆகிய இடங்களில் மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள் ளன. சுமார் ஏழாயிரம் பேர் எதிர்வரும் புத் தாண்டுக்கு முன்னர் இந்த இடங்களில் குடிய மர்த்தப்பட்டுவிடுவர். இந்தப் பிரதேசங்களில் கண்ணி வெடியகற்றும் பணிகள் நிறைவுபெற் றுள்ளன. பாடசாலைகள், குளங்கள் புனரமைக் கப்பட்டுள்ளன. வவுனியா பிதேசத்திலுள்ள 20 குளங்கள் வடமாகாண புனரமைப்புத் திட்டத் தின் கீழும் ஐந்து குளங்கள் வடக்கின் வசந்தம் 2010 திட்டத்தின் கீழும் புனரமைக்கப்ப டுகின்றன. உள்வீதிகள் திருத்தத்துக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்துக்கான மின் விநியோகத்துக்கு 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தற்போது இவற்றில் 14 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வருட இறுதிக்குள் திட்டம் முழுமை பெற்றதும் வுவுனியா முழுவதற்கும் மின்சாரம் வழங்கக் கூடியதாகவிருக்கும். சமுர்த்தி பயனாளிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களும் கோழி மற்றும் கால்நடைக ளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின் றன. அத்துடன் இந்தப் பிரதேசத்திலுள்ள 4000 ஏக்கர் நெற்காணிகளில் நெற்செய்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் போகத்தில் மேலும் நாலாயிரம் ஏக்கர் காணிகளில் நெற் செய்கையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட் டுள்ளது. இதற்காக மத்திய, மாகாண அரசின் கீழுமான நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைக்கப் பட்டு வருகின்றன.

மின்சார இணைப்பும் மின்விநியோகமும் இலவசம்

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் வவுனியா பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளுக்குக் கிராம சேவகர்களின் உறுதிப்படுத்தலின் பின் னர் இலவசமாக மின் இணைப்பு வழங்கப்படு வதுடன் ஆறுமாத காலத்துக்கு அவர்களிடமி ருந்து மின்சாரக் கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது..

புதிய வீடுகள் அமைக்கத் திட்டம்

ஐரோப்பிய யூனியன், உலக வங்கி, யு.என். எய்ட் ஆகியவற்றின் உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சுமார் ஐயாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. ஓவ்வொரு வீடும் தலா 3,25, 000 ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளன.

வாழ்வாதாரத்துக்கு உதவத் திட்டம்

புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி யோர், வெளியேறவுள்ளோரின் அடிப்படைத் தேவைகளுக்கும் மற்றும் வாழ்வாதாரத்துக்கும் உதவிகளை வழங்குவற்கு ஐ.நா. உயர்ஸ்தா னிகராலயம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதற் கென ஒரு திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’