
யாழ்ப்பாணத்தில் தூதரகம் அலுவலகம் திறப்பது குறித்து இந்தியா முன்வைத்த திட்டத்துக்கு இலங்கை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இலங்கை தூதரக அலுவலகங்கள் சென்னை, மும்பை மற்றும் கோல்கத்தாவில் உள்ளன. ஆனால் இலங்கையில் இந்திய தூதரகம் கண்டியில் மட்டுமே உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரோஹிதா பொகல்லகாமா இதுபற்றி கூறுகையில், இலங்கையில் மேலும் தூதரக அலுவலகத்தை திறக்க இந்தியா விரும்பினால் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை செயலாளர் நிரூபமா ராவ், தூதரகம் திறப்பது குறித்து இந்தியாவின் விருப்பத்தை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.
மேலும், இலங்கை பிரதமர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியபோது யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறப்பது பற்றி இந்தியாவின் விருப்பத்தை நிரூபமா தெரிவித்துள்ளார். அதற்கு இலங்கை தரப்பிலும் இசைவு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’