![]() | |
| வன்செயலில் உயிர் பிழைத்தவர்கள் |
நைஜீரிய வன்செயலில் நூற்றுக்கணக்கானோர் பலி
நைஜீரியாவின் மையப்பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட இன வன்செயல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியான மூன்று கிராமங்களில், ஒழுங்கை தாம் மீள நிலைநாட்டியுள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் தொண்ணூறுக்கும் அதிகமானோரை தாம் கைது செய்துள்ளதாகவும், தற்போது அந்தப் பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் சார்பில் பேசவல்லவர் ஒருவர் தெரிவித்தார்.
மலைப்பகுதிகளில் இருந்து வந்த மாடு மேய்க்கும் இனத்தவர்கள், ஜோஸ் நகரில் புகுந்து பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் உட்பட கிராமவாசிகளை பட்டாக்கத்திகளால் வெட்டிச் சாய்த்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த வன்செயல் தொடர்பாக தலைநகர் அபுஜாவில் பதில் அதிபர் குட்லக் ஜொனதன் விசேட பாதுகாப்பு கூட்டத்தை நடத்துகிறார்.
மேற்குக்கரை யூத குடியிருப்பில் புதிய வீடுகளுக்கு இஸ்ரேல் அனுமதி
![]() | |
| மேற்குக்கரையில் உள்ள யூத குடியிருப்பு |
அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பைடன் அவர்கள் இஸ்ரேலை சென்றடைவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இஸ்ரேலுக்கு விஜயம் செய்கின்ற துணை அதிபரான ஜோ பைடன்தான், அதிபர் ஒபாமா பதவியேற்ற பின்னர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்கின்ற மிகவும் உயர் அதிகாரியாவார்.
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்கள் இடையே சமரச பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சியாக ஜோ பைடன் இஸ்ரேல் செல்கிறார்.
அமெரிக்க முயற்சிகளை இந்த புதிய நிர்மாணம் குறித்த அறிவிப்பு குறைத்து மதிப்பிடுவதற்கான அச்சுறுத்தலாக இருப்பதாக ஒரு மூத்த பாலத்தீன அதிகாரியான, சாயிப் எரகத் கூறியுள்ளார்.
ஆனால், புதிய நிர்மாணம் ஏற்கனவே உள்ள கட்டிடங்களில் உள்ள ஆபத்தான இடைவெளியை நிவர்த்தி செய்யவே மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
'தாயில் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதை 5 வருடங்களில் தடுக்க முடியும்'
![]() | |
| எச்.ஐ.வி கிருமி |
இந்த சுகாதார திட்டத்தின் முன்னேற்ற மற்றும் முதலீட்டு வீதம் தற்போது உள்ள நிலையிலேயே தொடருமானால், தாம் இந்த இலக்கை எட்ட முடியும் என்று அந்த நிதியத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
மலேரியா பெரும் கொள்ளை நோயாக காணப்படுகின்ற பல நாடுகளில் இருந்து விரைவில் ஒழிக்கப்பட்டுவிடும் என்றும் அது கூறுகிறது.
கடந்த வருடத்தில் மாத்திரம் இந்த நிதியம் ஒரு நாளைக்கு 3600 பேரது உயிரைக் காப்பாற்றியதாகவும், 2002 இல் அது ஆரம்பிக்கப்பட்டது முதல், சுமார் 50 லட்சம் பேரை அது காப்பாற்றியுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
உணவைப் பகிரும் மனிதக் குரங்கு வகை
![]() | |
| போனபோ குரங்கு வகை |
''கரண்ட் பயோலஜி'' என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கும் ஒரு கட்டுரையில், ஆராய்ச்சியாளர்கள், இந்த வகை மனிதக்குரங்குகளை ஒரு அறைக்குள் உணவுடன் வைத்திருந்தது பற்றி ஆராய்ச்சியாஅளர்கள் குறிப்பிடுகையில், அந்த உணவை அவை உடனடியாக சாப்பிடலாம், அல்லது ஒரு கதவைத் திறந்து மற்றுமொரு போனபோ மனிதக் குரங்கை உள்ளே அனுமதித்து தன்னுடன் அந்த உணவை உண்ணுமாறும் செய்யலாம் என்ற வகையில் அமைத்திருந்ததாகக் கூறினார்கள்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், போனபோக் குரங்குகள் கதவைத் திறந்து உணவை பகிர்ந்துகொள்ளும் வழிமுறையினையே தேர்ந்தெடுத்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
தன்னலமற்ற செய்கை போல் தோன்றும் இந்த செய்கையின் பின்னால் உள்ள காரணம் குறித்து அவர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.
இந்திய- வங்கதேச எல்லைப்படையினர் பேச்சுவார்த்தை
![]() | |
| வங்கதேச எல்லையில் இந்திய பாதுகாப்புப் படையினர் |
இந்திய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள், எல்லையை தாண்ட முயற்சிக்கும் சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் மீதும், மாட்டு வணிகர்கள் மீதும் அடிக்கடி துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாக வங்கததேசத்தால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் இந்த 6 நாள் சந்திப்பு ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எல்லைகளின் ஊடாக ஆயுதங்கள், போதைமருந்து மற்றும் பெண்களும், சிறார்களும் கடத்தப்படுவது குறித்தும் இந்த சந்திப்பு ஆராயும்.
செய்தியரங்கம்
![]() | |
| முலாயம் சிங், லாலு பிரசாத் போன்றோர் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்க்கின்றனர் |
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் அறிமுகம்; வாக்கெடுப்பு ஒத்திவைப்பு
இந்தியாவில் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கிலான சட்ட மசோதா இன்று இந்திய நாடாளுமன்றத்தின் மேல் அவையில் அறிமுகப்படுத்தப்படது.
பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவை தாங்கள் ஆதரித்து வாக்களிப்போம் என்பதை முக்கிய எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தன.
பெண்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை ஏற்படுத்துவது என்ற யோசனை பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முன்வைக்கப்பட்டுவருகிறது என்றாலும் இந்த யோசனைக்கு இதுநாள்வரை போதிய அரசியல் ஆதாரவு இருந்ததில்லை.
தற்போது இந்த புதிய மசோதாவை சோஷலிஸ ஆதரவுடைய சிறிய கட்சிகள் எதிர்க்கின்றன.
இனச் சிறுபான்மையினர் மற்றும் சமூக ரீதியில் பின் தங்கியுள்ளோரின் பிரதிநிதித்துவம் குறைய இந்த இட ஒதுக்கீடு வழிவகுக்கும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான இட ஒதுக்கிட்டில், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை சரியா தவறா என்பது குறித்து சென்னை வளர்ச்சிக் கல்விகள் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் முனைவர் எஸ்.ஆனந்தியின் செவ்வியை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என இந்தியா நம்புகிறது: நிருபமா ராவ்
![]() | |
| நிருபமா ராவ் |
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் பட்சத்தில், இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களிலேயே சுமூகமான வாழ்க்கையை வாழ்வதற்கு வசதி ஏற்படும் என்றும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர், அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், ஏனைய முக்கிய தலைவர்களையும் சந்தித்து உரையாடிய போது இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண புனரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புக்கு இந்தியா வழங்கிய உதவிகளை வரவேற்ற இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், போரில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் இன்னமும் எஞ்சியுள்ள எழுபதாயிரம் பேரில் பெரும்பான்மையானவர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கே தங்கியிருப்பதாக கூறினார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற வீட்டுத்திட்டங்களுக்கு இந்தியா உதவும் என்றும் நிருபமா ராவ் அறிவித்துள்ளார்.
இலங்கையின் பல்வேறு நிறுவனங்களுக்கு 55 பேருந்துகளையும் இந்தியா வழங்க முன்வந்துள்ளது.
இணையம் அடிப்படை உரிமை ஆகும்: பிபிசி கருத்து வாக்கெடுப்பில் முடிவு
![]() | |
உலகெங்கிலிருந்தும் எழுபத்து ஒன்பது சதவீதமானோர் இணையத்தைப் பாவிக்கும் வசதியும் அனுமதியும் இருப்பது ஒரு அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர்.
இணையத்தை பாவிப்பவர்கள் மட்டுமல்லாமல் இதுவரை இணையத்தை பாவிக்காதவர்கள் மத்தியிலும் இதே கருத்துதான் நிலவுகிறது என்றும் தெரிகிறது.
இணையம் உருவாக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவடை ஒட்டி பிபிசி உலக சேவையில் இணையம் மக்கள் வாழ்வில் கொண்டுவந்துள்ள மாற்றங்கள் பற்றிய விசேட நிகழ்ச்சிகளை நேயர்கள் சில வாரங்கள் கேட்கலாம்.














தமிழோசை






0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’