
சென்னை: நடிகை ரஞ்சிதாவுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள சுவாமி நித்தியானந்தா, முன்ஜாமீன் கோர தீர்மானித்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
செக்ஸ் டேப் வெளியானதைத் தொடர்ந்து வந்த புகார்
இந்த நிலையில்தான் நேற்று நித்தியானந்தாவின் விளக்க வீடியோ அறிக்கையை அவரது வக்கீல், ஸ்ரீதர் வெளியிட்டார். நித்தியானந்தா மடத்தின் இணையதளத்திலும் இது வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஸ்ரீதர் கூறுகையில், நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் கோர்ட்டுக்கு தெரிவிக்கவில்லை. கோர்ட்டுக்கு தெரிவித்தவுடன் முன் ஜாமீன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நித்யானந்தா எங்கிருந்து வீடியோ காட்சி கேசட்டை அனுப்பி வைத்தார் என்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அதுபற்றி சொன்னால் போலீசார் அவரை கைது செய்து விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர் உரிய சட்ட பாதுகாப்புகளோடுதான் இனி வெளியே வருவார்.
அவர் கேரளாவில் இருக்கிறாரா? என்பது பற்றி சொல்ல முடியாது. அவர் கடைசியாக வாரனாசியில் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய அதிகாரபூர்வ இமெயில் முகவரிக்கு தனது பேச்சு அடங்கிய வீடியோ காட்சியை அனுப்பி உள்ளார். அதைத்தான் நான் கொடுத்து உள்ளேன். அவர் பாபாஜி என்ற தன்னுடைய குருஜியுடன்தான் இருக்கிறார்.
தற்போது புகார் கொடுத்துள்ள லெனின் சேலம் ஆத்தூரிலிருந்து, சென்னைக்கு வந்து புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் புகார் கொடுக்க வேண்டிய இடம் கர்நாடக மாநில போலீசாகும்.
முதலில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை போலீசார் கூறினார்கள். இப்போது பாதிக்கப்பட்ட பெண் யாரும் புகார் கொடுக்காமல் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. நாங்கள் அதை சட்டரீதியாக சந்திப்போம். போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு பின்னணி உள்ளது என்பது மட்டும் இப்போது தெளிவாக தெரிகிறது. விரைவில் அவை வெளிச்சத்துக்கு வரும் என்றார் ஸ்ரீதர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’