வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 மார்ச், 2010

தமது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகின்றமைக்கு யாழ். பனை தென்னை வள அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பு.

யாழ். தென்னை பனை வள அபிவிருத்தி சங்கத்தினால் பனை உற்பத்திசார் வல்லுநர்களின் மாநாடு நடாத்தி அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றி வருகின்றமைக்காக சங்க நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

இன்று முற்பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ். தலைமைப் பணிமனைக்கு வருகை தந்த யாழ். தென்னை பனை வள அபிவிருத்தி சங்கத்தின் சகல பிரதேச நிர்வாகப் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். பனை வளத்தினை தமது வாழ்வாதாரமாக் கொண்டிருக்கும் பல ஆயிரம் குடும்பங்களின் சார்பில் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற பனம் உற்பத்தி வல்லுநர்களின் மாநாட்டில் எமது கோரிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்தோம். அவற்றில் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எமது சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் சார்பிலும் அமைச்சருக்கு எமது நன்றிகளைத் தெரிவிப்பதோடு எமது வாழ்க்கை வளம் பெற அமைச்சரின் கரங்களைப் பலப்படுத்துவோம். இவ்வாறு சங்க நிர்வாகிகள் அங்கு வைத்து தெரிவித்தனர்.


இதேவேளை தற்சமயம் பனங்கள்ளு உற்பத்தி பருவகாலம் ஆரம்பமாகி இருப்பதனால் பதநீர் உற்பத்தி மற்றும் பதநீரை போத்தலில் அடைக்கும் வழிமுறைகள் தொடர்பான உதவிகளை தாம் எதிர்பார்ப்பதாக சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இவ்வேண்டுகோளை கவனத்துடன் செவிமடுத்த அமைச்சரவர்கள் உடனடியாகவே பதநீர் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான உதவிகள் பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார். இச்சந்திப்பின்போது ஈபிடிபியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உதயன் வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ரங்கேஸ்வரன் தென்மராட்சி அமைப்பாளர் சாள்ஸ் வலிகாமம் அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’