வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 மார்ச், 2010

காலஞ்சென்ற மகேஸ்வரி அம்மையாரின் இறுதிநிகழ்வுகளில் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்குகொண்டார்.

வடமராட்சியில் பல பொது அமைப்புக்களின் போஷகரும் மாதர் அமைப்புக்களின் முக்கியஸ்தருமான திருமதி தில்லையம்பலம் மகேஸ்வரி அவர்களின் இறுதிநிகழ்வுகளில் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்குகொண்டு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.



வதிரி மக்கள் மன்றம் வடமராட்சி மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் வதிரி சனசமூக நிலையம் போன்ற அமைப்புக்களின் போஷகராக விளங்கிய திருமதி மகேஸ்வரி அவர்கள் மாதர் அமைப்புக்கள் மற்றும் யாழ். மகளிர் அமைப்புக்களின் முக்கியஸ்தராகவும் விளங்கினார். அதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சிறுவயது முதலே நன்கறிந்த அவர் அமைச்சரின் அண்மைக்கால மக்கள் பணி குறித்து தனது பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொண்ட ஒருவராவார்.

இன்றுமாலை நெல்லியடியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற இறுதிநிகழ்வுகளில் பங்குகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆலங்கட்டையடி மயானத்தில் இடம்பெற்ற இறுதிக்கிரியைகளிலும் பங்குகொண்டதுடன் மகேஸ்வரி அம்மையாரின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’