வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 மார்ச், 2010

இளைய பரம்பரையை அறிவு பூர்வமாகவும் வலிமை மிகுந்ததாகவும் உருவாக்;குவதே தமது கொள்கையாகும்

எமது இளைய பரம்பரை அறிவு பூர்வமாகவும் வலிமை மிகுந்ததாகவும் இருக்கச் செய்வதோடு உலகில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக் கூடியவாறு அவர்களை வலிமை படைத்தவர்களாக உருவாக்குவதே தமது கொள்கையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இளைஞர்களிடம் இருக்கவேண்டிய மிகப் பெரிய பலம் அறிவேயன்றி ஆயுதங்கள் அல்ல. கடந்த சில தசாப்தங்களாக சில தேசியத் தலைவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் பெறுமதியான உயிர்களை இல்லாதொழிக்கும் வகையில் அவர்களை தவறான வழியில் இட்டுச் சென்றதால் அவர்கள் ஆயுதங்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இளைஞர்கள் எந்த அபாயத்தையும் எதிர்நோக்கக் கூடாது என்பதையும் அவர்கள் சுபீட்சத்தை எட்டும் வகையில் வலிமையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதும் தனது பொறுப்பாகும். தமது பிள்ளைகளுக்கு பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்களை விட மேலதிகமான அறிவை கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என மேலும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’