ஐ.பி.எல் போட்டியின் 16 ஆவது நளான இன்று சங்ககார தலைமையிலான டெல்லி கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியும் சுரேஸ் ரெய்னா தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி சுப்பர் ஓவர்முறையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வெற்றிக்கொண்டதன் மூலம் தொடரில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களதடுப்பை மேற்கொள்ள தீர்மாணித்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்த்தில் யுவராஜிசிங் 43 ஓட்டங்களையும் பத்தான் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் முரளிதரன், 03 விக்கெட்டுகளை கைப்பறினார்.
137 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்று போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய மெத்தியு ஹெய்டன் இப் போட்டியில் 33 ஓட்டங்களையும், பட்டேல் 57 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஒருகட்டத்தில் வெற்றிவாய்ப்பு கூடுதலாக சென்னை சுப்பர்கிங்ஸ் அணிக்கு காணப்பட்ட போதும் பஞ்சாப் அணி வீரர்கள் நுட்பமாக பந்தை வீசி போட்டியை சமனிலை செய்தனர்.
இதனை தொடர்ந்து வெற்றியை தீர்மாணிக்கு சுப்பர் ஓவர்முறையில் முதலில் சென்னை சுப்பர்கிங்ஸ் அணி துடுப்பெடுதாடியது. ஆரம்பதுடுப்பாட்ட வீரர்களாக மெத்தியு ஹெய்டன், மோர்கல் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஹெய்டன் 2ஆவது பந்தில் போலட் முறையில் ஆட்டமிழந்தார். தெடர்ந்து வந்த ரெய்னா 3ஆவது பந்துக்கு ஆறு ஓட்டத்தை பெற்றார். எனவே ஒரு ஓவருக்கு சென்னை சுப்பர்கிங்ஸ் அணி 9 ஓட்டங்களை பெற்றது.
பந்து வீச்சில் பஞ்சாப் அணியின் டெரன் சிறப்பாக பந்தை வீசினார். எனவே 10 ஓட்டம் பெற்றால் வெற்றி என களமிறங்கி பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மஹில முரளிதரனின் முதல் பந்துக்கு ஆறு ஓட்டத்தை பெற்று 2ஆவது பந்துக்கு ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து யுவராஜி 4ஓ ட்டத்தை பெற்று அணியை வெற்றி பெற செய்தார்.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக டெரன் தெரிவு செய்யப்பட்டார்.
தொடரில் பஞ்சாப் அணி 02 புள்ளிகளை பெற்றுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’