![]() | |
| நூரி அல் மலிகி |
பாக்தாதில் பிரதமர் நூரி அல் மலிகி முன்னிலை
இராக் நாடாளுமன்ற தேர்தலின் சமீபத்திய முடிவுகளின்படி தலைநகர் பாக்தாதில் தற்போதைய பிரதமர் நூரி அலி மலிகி பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்
. இராக்கில் இருக்கின்ற தொகுதிகளில் ஐந்தில் ஒரு பகுதி பாக்தாதில் இருக்கின்றன. பாக்தாதில் பதிவான இருபது சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு விட்டதாகவும், பாதிக்கும் மேற்பட்ட இராக் மாகாணங்களில் இருந்து இன்னமும் முடிவுகள் வரவில்லை எனவும் பாக்தாதில் இருக்கின்ற பிபிசி செய்தியாளர் கூறுகின்றார்.
எனினும் இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளில் மூன்று ஷியா மாகாணங்களில் தற்போதைய பிரதமர் நூரி அல் மலிகி முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு அடுத்தப்படியாக சுனி மற்றும் ஷியா குழுக்களுக்கு தலைமையேற்றுள்ள முன்னாள் பிரதமர் அயத் அல்லாவி வாக்குகளை பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் குண்டுத்தாக்குதல்
![]() | |
| தாக்குதலில் பலர் காயம் |
பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு அருகில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தன்னை வெடிக்கச் செய்துகொண்டு தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பொலிசாரும் படைவீரர்களும் பொதுமக்களும் அடங்குகின்றனர்.
நீதிமன்ற கட்டடமொன்றை தாக்க முற்பட்ட குண்டுதாரி, அருகில் உள்ள வீதிச் சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டபோது அவர் தன்னி்ல் பொருத்தி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்துகொண்டதாக பொலிசார் கூறுகின்றனர்.
கடந்த வருடம் உள்ளூர் தாலிபன் குழுக்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, பெரும் படைநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட சுவாட் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை லாஹுரில் வெள்ளிகிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுதாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் தேர்தல் கண்காணிப்பு ஆணையத்தில் இரு வெளிநாட்டவர்கள்
![]() | |
| ஹமீது கர்சாய் |
ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கண்காணிக்கவுள்ள ஆணையத்தில் இரு வெளிநாட்டவர்கள் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அதிபர் ஒப்புக் கொண்டுள்ளார்
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கண்காணிக்கும் ஆணையத்தில் ஆப்கானிஸ்தானியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என கடந்த மாதம் அவர் கூறியிருந்தார்.
பிப்ரவரி மாதம் அவர் வெளியிட்டு இருந்த சர்ச்சைக்குரிய ஆணையில், தேர்தல் ஆணைய உறுப்பினர்களை அவரே தேர்ந்தெடுப்பார் என்று கூறப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சி தான் இது என்று அப்போது குறை கூறப்பட்டது.
ஏனென்றால் அதிபர் தேர்தலில் அவர் பெற்று இருந்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு செல்லாது என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இதற்கிடையே, உருஸ்கான் மாகாணத்தில் இடம்பெற்ற சாலையோர குண்டுத்தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் பொது மக்கள் பயணிக்கும் வாகனத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.
தாய்லாந்தில் தக்சின் சினவத்ரா ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி
![]() | |
| ஆதரவாளர்கள் |
தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்கள் சிவப்பு சட்டையணிந்து பாங்காக் நகரில் குவிந்து வருகின்றனர். கிட்டதட்ட பத்து லட்சம் பேர் ஒன்று கூடி பேரணியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் கிராமப்புறங்களை சேர்ந்த இந்த ஆதரவாளர்கள் தற்போதைய அரசு ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள். புதிய தேர்தல் வேண்டும் என்று கோரும் இவர்கள், அதன் மூலம் தக்சின் சினவத்ரா ஆட்சிக்கு திரும்புவார் என்று நம்புகின்றனர்.
பேரணியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் வன்முறை சூறையாடல் இடம்பெறாமல் இருக்க விசேட அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.














தமிழோசை


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’