
மட்டக்களப்பில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 21 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பு நாவலடியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்தும் நபர்களிடம் குறித்த சந்தேக நபர்கள் பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் தலா ஒரு லட்ச ரூபா முற்பணமாக செலுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’