வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 மார்ச், 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 2)

ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர். அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். விசாரணை அதிகாரி அங்கே இருந்த மல்லி என்ற கொடிய அட்டைதான். இந்த மல்லி என்ற அட்டை பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராம். அப்போது அவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நெத்தியில் சுட்டுக்கொன்ற மாவீரன் என்று சிறிய அட்டைகள் புகழ்ந்து சொன்னார்கள். தமிழர்களைக் கொன்றதில் புகழ்ச்சி கொண்டவர்களா விடுதலைப் போராளிகள்? மனதுக்குள் நினைத்துக்கொண்டு மெதுவாக நடந்து அந்த வீட்டுக்குச் சென்றேன். அங்கே, என்னைத் தரையில் அமரும்படி கூறினர். நானும் அமர்ந்தேன் என் எதிரில் ஓர் கதிரை போடப்பட்டது. அந்தக் கதிரையில் மல்லி என்ற அட்டை அமர்ந்தது.


தடித்தக் குரலில் கேட்டார்:- 

மல்லி – உனது பெயர் என்ன?

கிறேசியன் - எனது பெயர் கிறேசியன். 

மல்லி – சொந்த ஊர்?

கிறேசியன் - நாவாந்துறை

மல்லி – எந்த இயக்கம்?

கிறேசியன் - ஈ.என்.டி.எல்.எப்.

மல்லி – எப்போது அதில் சேர்ந்தாய்?

கிறேசியன் - 1987ல்

மல்லி – எங்கே பயிற்சி எடுத்தாய்?

கிறேசியன் - கிளிநொச்சியில். 

மல்லி – எத்தனை பேரைக் கொலை செய்தாய்?

கிறேசியன் - நான் யாரையும் கொன்றதில்லை.

மல்லி – எங்கே எல்லாம் கொள்ளையடித்தாய்?

கிறேசியன் - நான் எங்கும் கொள்ளையடித்ததில்லை.

மல்லி – உன்ர கொக்காவை இந்தியன் ஆமிக்கு எத்தனை தரம் கூட்டிக்கொடுத்தாய்?

கிறேசியன் - பதில் எதுவும் கூறவில்லை.

மல்லி – மீண்டும் - அப்ப கொம்மாவைக் கூட்டிக் குடுத்தியா?

கிறேசியன் - மரியாதையான கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வேன்.

உடனே மல்லி அட்டைக்கு கோபம் வந்து எனது முகத்தில் அவரது செருப்புக் காலால் உதைத்தார். நான் மறு முனையில் வீழ்ந்தேன். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் என்னைச் சுற்றி எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது தெரியாது. மல்லி கோபத்துடன் கத்துகிறார். “அந்தக் கருங்காலி கட்டையை எடுத்துவாடா” என்று. அடுத்த நிமிடத்தில் ஓர் முரட்டுத்தனமான கட்டையால் நிலத்தில் கிடந்த என்னைத் தாக்கினார். கைகள், கால்கள், முதுகு. வயிறு என்று அனைத்துப் பகுதியிலும் மாறி மாறி அடித்தார். ஒரு அடி விழும் போது வலியினால் துடித்துத் திரும்புகையில் மறு புறத்தில் அடிப்பார். அந்தப் பக்கம் வலியினால் திரும்புகையில் எதிர்புறத்தில் அடிப்பார். தலையைத் தவிர ஏனைய அனைத்துப் பாகங்களிலும் அடித்தார் அந்தக் கருங்காலிக் கட்டையால்.

மரணத்தின் வேதனை எனக்குத் தெரியாது. ஆனால் சித்திரவதையின் ஆரம்பக்கட்டத் தண்டனையை அனுபவித்தேன். நான் எனது நண்பர்களையோ, உறவினரையோ, என் வயதில் குறைந்தவர்களையோ “வாடா, போடா” என்று கதைப்பது கிடையாது. என்னைத் தாக்கும் போது அந்த மல்லி என்ற அட்டையிடமிருந்து வந்த வார்த்ததைகளை இதில் எழுத முடியாத நிலையில் இருக்கிறேன். தமிழில் அப்படியான கொடிய வார்த்தைகள் இருக்கிறதா என்று வியந்தேன் அந்த வேதனையிலும். குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரையில் இவ்விதம் தாக்கிய அந்த அட்டை, களைப்படைந்து விலகிச் சென்றது. சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அதே கட்டையால் தாக்கினார். 

அவருக்குக் கோபம் வந்தது எதனால் என்றால் நான் “மரியாதையான கேள்வி” என்று கேட்டதுதான். அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் மரியாதையானவை, நான் கேட்டதுதான் மரியாதைக் குறைவான வாசகமாக அவர் அறிவுக்குப்பட்டது.

மீண்டும் களைப்படைந்த அந்த அட்டை சிறிய அட்டைகளிடத்துச் சத்தமாகச் சொன்னார், “இவனை இழுத்துக்கொண்டு போய் அந்த அறையில் போற்றா” என்றார். அவர்களும் எனது கால்ச் சங்கிலியில் பிடித்து இழுத்துச் சென்று அறையினுள் விட்டனர். எனது முதுகு நிலத்தில் உரசியதால் அடி வலியுடன் அதுவும் சேர்ந்து வதைத்தது.

தொடர்ந்து நான்கு நாட்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன். இரவு 11மணியளவில் பல அட்டைகள் சேர்ந்து கதைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு லொறிகள் எங்கள் கைதிக் கல்லறைகள் முன் வந்து நின்றன.

நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றிலுமிருந்த வீடுகளிலிருந்தும் பல பேருக்கு விலங்கிட்டு அழைத்து வந்திருந்தனர். எங்களையும் வெளியில் அழைத்தனர். மெதுவாகச் சென்றோம். என்னுடன் அந்த அறையில் இருந்தவரது பெயர்கள் 

(01)     திரு. ஈசன் (நெடுந்தீவு)

(02)     திரு. நாகேஸ் (புங்குடுதீவு)

(03)     திரு. கண்ணன் (அரியாலை)

(04)     திரு. பாலசுப்பிரமணியம் அல்லது ஜோதி (காங்கேசன் துறை)

(05)     திரு. சிவலிங்கம் (குருநகர்)

(06)     திரு. பிரசாந்த் (கிளிநொச்சி)

ஆகியோர் அங்கு நின்ற லொறியினுள் ஏறினோம். எங்கே கொண்டு செல்கின்றனர் என்பதும் எமக்குத் தெரியாது.

இவர்கள் யார்? ஏதற்காக இப்படிக் கொடுமைப்படுத்துகின்றனர்? விடுதலை யாருக்காக? நாங்கள் எங்கள் இனத்தின் எதிரிகளா? சிங்களவருடன் நாம் எதற்காகப போராடவேண்டும், விடுதலை இந்தக் கொடிய அட்டைகளிடமிருந்தா? அல்லது சிங்கள இராணுவத்திடமிருந்தா? சட்டம், ஒழுங்கு, விசாரணை என்று இருந்த காலம் போய் மிருகங்களிடம் அகப்பட்டுக்கொண்ட மனிதர்களாகி விட்டோமே என்று எண்ணிக் கொண்டு லொறியின் உள் ஓரத்தில் அமர்ந்தேன்.

வாய் பேசும் மிருகங்களிடம், வாய் பேசும் மனிதன் அகப்பட்டுள்ளான் என்ற எண்ணத்துடன் அடுத்த வதை முகாமுக்கு பயணம் செய்ய தயாராக்கிக் கொண்டேன். ஏறக்குறைய இரண்டு லொறிகளிலுமாக 150 பேர்வரை ஏற்றப்பட்டோம். மிருகங்கள் போல் உள்ளே தள்ளி தார்ப்பாயால் லொறியின் பின்பகுதியை மறைத்தனர். இந்தவேளை மல்லி அட்டை அங்கே வந்தார்.

டே, சலீமிட்ட சொல்லடா, “ இவர்கள் அத்தனை பேரையும் சுட்டுக் கொல்லச் சொல்லி” என்று கூறி லொறிகள் இரண்டையும் புறப்படச் சொன்னார், 

இந்த மல்லிப் பற்றி சிறு குறிப்பைத் தருகிறேன்:- 

மல்லியின் பிடியில் நான் ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்தேன். தினமும் அந்த அறையில் இருந்த தமிழ் இளைஞர்களை தாக்குவதும் சித்திரவதைச் செய்வதுமாகத்தான் இருந்தார். இவர் இப்படி ஓர் பதவியை அடையக் காரணமாக இருந்தது இவர் செய்துவிட்ட கொலைகள்தானாம். யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் இருந்த ஏனைய இயக்க உறுப்பினர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும், சந்தேகப்படுபவர்களையும் இவர் சுட்டுக் கொன்று விடுவாராம். பின்னர் சுட்டுக் கொன்றவர்களது விபரங்களை எழுதி தலைவர் பிரபாகரனுக்கு அனுப்புவாராம். சுட்டுக்கொல்லப்படும் அனைவரும் துரோகிகள் என்று இவரே தீர்ப்பும் கூறி எழுதி அனுப்ப தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சியடைந்து இவரைத் தேர்வு செய்து பதவி உயர்வு கொடுத்து சிவபுரம் முகாமுக்கு சித்திரவதை வல்லூனராக அனுப்பிவைக்கப்பட்டாராம். இவரை மண்டை மல்லி என்றும் பிணம் தின்னி என்றும் இவரது சகாக்களால் பெருமையாக அழைக்கப்பட்டனர். தமிழர்களை இவர் தலையில் சுட்டுக்கொல்வதால் இவருக்கு மண்டை மல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறினர்.

என்னுடன் இருந்தவர்களை இவர் சித்திரவதை செய்யும் போது நான் பார்த்துக் கொண்டிருப்பேன். எனது மனதுக்குள் நான் வேண்டிக்கொண்டேன், இவனது மரணத்தை நான் பார்க்க வேண்டும், இறைவன் இவனுக்கு உரிய தண்டனை வழங்குவார் என்பது என் நம்பிக்கையாக இருந்தது. இரண்டு ஆண்டுகளின் பின் இரண்டு வாரங்கள் மட்டுமான ஓர் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. அட்டைகளாக(புலி) அறிவித்த அந்த யுத்தநிறுத்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

யுத்த நிறுத்தம்தானே என்ற துணிச்சலில் மல்லி அட்டையும், வேறு ஓர் அட்டையும் ஒட்டுசுட்டான் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இலங்கை இராணுவம் இந்த இரு அட்டைகளையும் சுட்டது. இதில் மல்லி கீழே விழுந்ததும். கூட வந்த அட்டை மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டது. மல்லியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

தகவல் அறிந்த அட்டைக் கூட்டம் ஒட்டுசுட்டான் சென்று மல்லியின் தலையில்லா முண்டத்தை எடுத்து வந்தனர். மல்லியின் தலைக்காக அட்டைகள் (புலிகள்) மூன்று நாட்களாகக் காத்திருந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்திடம் அட்டைகள் முறையிட்டு மல்லியின் தலையைக் கண்டுபிடித்துத் தரும்படி மன்றாடி நின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் ஒட்டுசுட்டான் காடுகளில் தேடிப்பார்த்தனர், இராணுவம் மல்லியின் தலையை வெட்டி காடுகளுக்குள் வீசியிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் சந்தேகப்பட்டது.

சிலவேளை நாய் அல்லது நரிகள் மல்லியின் தலையை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சந்தேகம் தோன்றியது. இதனால் செஞ்சிலுவைச் சங்கம் ஒட்டுசுட்டான் காடுகளிலும், நாய்கள் உள்ள வீடுகளிலும் தேடிப்பார்த்தனர் மல்லியின் தலையை! கடைசிவரை கிடைக்கவே இல்லை மல்லியின் தலை. நான்காம் நாள் தலையில்லாத மல்லிக்கு பட்டம் வழங்கப்பட்டு எரியூட்டப்பட்டார். 

லெப்ரினள் கேணல் நவநீதன் (மல்லி) (புதுக்குடியிருப்பு)

மல்லியின் சித்திரவதையை அனுபவித்த போது நான் என்மனதுக்குள் இறைவனிடம் வேண்டிக்கொண்டது என் கண் முன்னாலேயே இவரது மரணத்தைப் பார்க்க வேண்டும் என்று. மண்டை மல்லி மண்டை இல்லாமலேயே மக்கள் முன் மாண்டுபோனார். இறைவன் ஒரு நாள் தண்டிப்பார் என்பது என் நம்பிக்கையாக இருந்தது.

வவுனிக்குளம் சிவபுரத்திலிருந்து புறப்பட்ட லொறி இரவு 20 நிமிடங்கள் வரை பயணித்து ஓர் இடத்தில நிறுத்தப்பட்டது. 

(தொடரும்….)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’