
13 வது அரசியலமைப்பை அமுல்படுத்தவேண்டும். அத்துடன் ஒஸ்லோ உடன்படிக்கையை நிராகரிக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் இன்று வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தல் முடிவடைந்ததும், 13 வது அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தி, மாகாணசபைக்கு முழுமை அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
இந்த தகவலை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
13 வது அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தும் தமது யோசனைக்கு இந்தியாவும் தமது ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவை சந்தித்த சந்திரகாந்தன், தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை அவரிடம் கையளித்ததாகவும் மௌலானா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் சந்திரகாந்தன் இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’