வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 மார்ச், 2010

13ம் தேதி தீபிகாவின் நடனத்துடன் தொடங்கும் ஐபிஎல்-3

மும்பை: பாலிவுட் மெல்லிடையாள் தீபிகா படுகோனின் சிலிர்க்க வைக்கும் நடன நிகழ்ச்சியுடன் 3வது ஐபிஎல் [^] கிரிக்கெட் போட்டி தொடர் நாளை மறுநாள் கோலாலமாக துவங்குகிறது.

3வது ஐபிஎல் தொடர் வருகிற 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

மும்பை, மொகாலி, கொல்கத்தா, சென்னை, அகமதாபாத், பெங்களூர், டெல்லி, கட்டாக், நாக்பூர், ஜெய்ப்பூர் தர்ம சாலா ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கின்றன.

இதற்கான தொடக்க விழா 12ம் தேதி வெள்ளிக்கிழமை மும்பையில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. முக்கியாக பாலிவுட்டினரின் குத்தாட்டம், கலக்கல் கவர்ச்சி ஆட்டங்கள் இடம் பெறவுள்ளன.

பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பெருமளவில் கலந்து கொள்ளவுள்ளனர். உச்சமாக நடிகை தீபிகா படுகோனின் கவர்ச்சிகரமான நடனமும் மிக முக்கியமாக இடம் பெறவுள்ளது.

இதுதவிர புகழ்பெற்ற அமெரிக்க பாப் கலைஞர்களான லியோனல் ரிச்சி, அப்பா ரிவைவல் யூபி40 இசைக்குழு ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

தொடக்க விழா மிக கோலாகலமாக கண்ணை கவரும் வகையில் நடைபெறும் என்று ஐபிஎல் சேர்மன் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

தொடக்க விழா முடிந்ததும் தொடரின் முதல் போட்டி நடைபெறும். இதில் டெக்கான் சார்ஜர்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அதன் பின்னர் 13ம் தேதி முதல் தினசரி 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’