வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இராட்சத வெண் சுறா (Great White Shark)

காரைதீவில் (20.02.2010) சனிக்கிழமை அகப்பட்ட 17 அடி நீளமான இராட்சத வெண் சுறா (Great White Shark) இதுவாகும்.

மக்கள் திரண்டு வந்து பார்ப்பதையும் அதனை குறுக்காக துண்டுதுண்டாக வெட்டியபோது எடுத்த ஒருதுண்டையும் படங்களில் காணலாம்.


கடல்களில் மீன் பிடிக்கும் தொழிலில்இ இயந்திர வலையிழுப்புக் கப்பல்களின் உதவியால் மிகப் பெருமளவில் மீன்கள் பிடிக்கின்றார்கள். உலகில் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் டன் எடையுள்ள மீன்களைப் பிடிக்கின்றார்கள் இப்படி அளவுக்கு அதிகமாக கடல்வாழ் மீன்களைப் பிடிப்பது போலவேஇ சுறா மீன்களையும் மிக அதிக அளவில் பிடிகிக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 40 மில்லியன் சுறாமீன்களைப் பிடிக்கின்றார்கள் சுறாவின் செட்டை அல்லது மீன்சிறை மீன்சிறகு என்னும் துடுப்பு போன்ற பகுதியை மக்கள் விரும்பி உண்ணுவதால் இப்படிப் பெருமளவில் சுறா மீன்கள் கொல்லப்படுகின்றன

  • வெண் சுறாக்கள் வெதுவெதுப்பான கடல் நீரில் ஒன்று தொடக்கம் 1280 மீற்றர் ஆழப்பகுதியில் சஞ்சாரம் செய்கின்றன.
  • இவை விரிந்து பரந்த விமையான வால்பகுதியின் துணையுடன் மணிக்கு 15 மைல் (24 கிலோ மீற்றர்) வேகமுடன் நீரில் பயணிக்க வல்லன.
  • இராட்சத வெண் சுறா பல வரிசைகளில் அமைந்த 3,000 பற்களை கொண்டன எனவும் முன் வரிசை பற்கள் சேதமடையும் வேளை பின் வரிசை பற்களை மாற்றீடு செய்யும் வல்லமை தாடைப் பகுதியில் செயற்படுகின்றதாம் (சுழற்சி முறையில் மாற்றீடு செய்யும் பொறிமுறை).
  • இரைகளை பெரிய துண்டுகளாக விழுங்கும் சுறா தனது உணவாக "கடல் சிங்கம்" போன்ற பெரிய ஒன்று சிக்கும் வேளை அடுத்த ஒன்று அல்லது இரண்டு மாதம் உணவு ஒன்றும் சாப்பிடாது நெடுநாள் பசிகாக்குமாம்.
  • இராட்சத வெண் சுறாவின் மேல்பகுதி கறுப்பு அல்லது கடும்சாம்பல் நிறமும் கீழ்பகுதி வெள்ளையாகவும் இருக்கின்றது.
  • சுறாக்களின் நுகரும் (மோப்பம்) சக்தி அபாரமானது. இவற்றினால் ஒரு துளி இரத்தம் 100 லீற்றர் நீரில் கலந்த நிலையிலும் அடயாளம் காண வல்லனவாகவும் சிலதுளிகளை (இரத்தம்) 3 மைல்கள் (5 கிலோ மீற்றர்) தூரத்திலும் இருந்து அறியும் அபார உணர்வு கொண்டுள்ளன.
  • இராட்சத வெண்சுறா 2 அல்லது அதற்கு மேற்ப்பட்ட குழுவாக மட்டும் நீரில் சஞ்சரிக்கின்றன.
  • பெண் சுறாக்கள் ஆண் இனத்தினைவிடவும் உருவத்தில் (நீளம்) பெரியனவாகஇருக்கின்றன.
  • இராட்சத வெண்சுறாக்கள் தனது வாழ்நாளில் தொடர்ந்து நீந்தியவண்ணம் இருக்கும் (இறக்கைகளை அசைத்த வண்ணம்) அல்லாது விட்டால் மூழ்கிவிடும்.
  • உலகிலுள்ள 600 வகை சுறா இனங்களில் இராட்சத வெண்சுறாவும் ஒன்று.

வெண் சுறா தொடர்பிலான வீடியோ
வீடியோ 02
Great White Shark Facts

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’