-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 22 பிப்ரவரி, 2010
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியுள்ளது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுடன் இனிவரும் காலத்தில் இணைந்து செயற்படாது என அறிவித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 2004 ம் ஆண்டு அது செயற்பட்ட அடிப்படையில் இருந்து விலகிச்சென்றதன் காரணமாகவே இந்த முடிவை தாம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தகவல் தொடர்பாக தாம் எவ்வித கருத்தையும் வெளியிடமுடியாது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அடிப்படையில் விநாயகமூர்த்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற தேசியப் பட்டியலை ஒதுக்கியுள்ளமையே இதற்கான காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக எமது செய்திசேவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவை தொடர்புகொண்டு கேட்டபோது, அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனக்குறிப்பிட்டார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவ்வாறான தகவலை வெளியிட்டிருந்தாலும் அவரை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்து செயற்பட தாம் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’