வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

இலங்கையில் இணையத்தளங்களை தடைசெய்யும் திட்டத்தை நிறுத்த ஜனாதிபதி உத்தரவு


சீன ஆதரவுடன், இலங்கையில் இணையத்தளங்களை தணிக்கை மற்றும் தடைசெய்யும் திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தி இணையத்தளங்களுக்கு தணிக்கையை ஏற்படுத்தி அதன் ஊடாக அவற்றிற்கு அனுமதி பத்திரங்களையும் செயற்பாட்டு கட்டணங்களையும் விதிப்பதை நோக்காக கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருந்தாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஏற்கனவே இலங்கையில் ‘லங்கா இ நியூஸ்”, ‘லங்கா நியூஸ் வெப்” “தமிழ் கார்டியன்” மற்றும் “தமிழ் நெற்” என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஏனைய செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் புதிய இணையத்தள நடைமுறைகளுக்கு குறித்த இணையத்தளங்கள் உட்படவேண்டும் என்பதே அந்த ஆணைக்குழுவின் நோக்காக இருந்தது.

எனினும் செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான எந்த ஒரு உத்தரவும் தமக்கு கிடைக்கவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஸ பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

இணையத்தளங்களை கண்காணிப்பது தமது ஆணைக்குழுவின் பணியல்ல எனக் குறிப்பிட்ட அவர், எனினும் சில இணையத்தளங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றன எனக்குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இணையத்தளங்களை தடைசெய்யும் திட்டத்தை உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த போதும், தாம் அவ்வாறான திட்டம் ஒன்றுக்கு நிதியளிக்க தயார் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’