-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
கிளிநொச்சி, முல்லைத்தீவில் நீதித்துறை செயற்பாடுகள் ஆரம்பம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் நீதித்துறை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1987 ஆம் ஆண்டு முதல் இந்தப்பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் நீதித்துறை செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன.
கடந்த வருடம் மே மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தால் தோல்வியடையச்செய்யப்பட்ட பின்னர் அவர்களின் நீதித்துறை செயற்பாடுகள் முடங்கின.
இந்தநிலையிலேயே இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணத்திலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் நீதித்துறை செயற்பாடுகள்,முன்னர் இடம்பெற்று வந்தன.
1995 ஆம் ஆண்டின் “சூரியக்கதிர்” இராணுவ நடவடிக்கையின் பின்னர் அங்கும் இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் மீளமைக்கப்பட்டன.
இந்தநிலையில் கிளிநொச்சியின் புதிய மாவட்ட நீதிபதியாக எஸ் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியின் நீதிமன்ற நடவடிக்கைகள்,புதிய கட்டிடத்தொகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’