வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 பிப்ரவரி, 2010

போலி கடன் அட்டை வைத்திருந்த இலங்கை பட்டதாரி ஒருவர் சென்னையில் கைது


பல போலி கடன் அட்டைகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கையை சோ்ந்த பட்டதாரி ஒருவர் சென்னையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார், என்று இந்து நாளேடு தகவல் தெரிவித்துள்ளது.
சஞ்சீவ் காந்த் எனும் இலங்கை வாலிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

மடிக் கணனி (லாப்டாப்) ஒன்றும் மற்றும் கணனி உதிரிகளும் எக்மோரில் வாங்க முனையும் போது கடைக்காரர் கொடுத்த புகாரை அடுத்து அவர் சென்னை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் (CCB ) கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதின் போது அவரிடம் மூன்று போலி அட்டைகள் இருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சஞ்சீவ் தங்கியிருக்கும் ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து 110 போலி டெபிட் (debit) ரக அட்டைகளும் மற்றும் எழு போலி கடன் அட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் நாடு, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட சஞ்சீவ் காந்த ஒரு பிகாம்ட(B.com) பட்டதாரியாவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’