
அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தா கூறுவது போன்று உணர்ச்சிகரமான வெற்றுக் கோசங்களுக்கு இடமளியாமல் நடைமுறைச் சாத்தியமான வழிகளை தெரிந்து கொண்டு செயல் படுவோமேயானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
கடந்த 10வருடத்திற்கும் மேலாக புலிகளின் 6ற்கும் மேற்பட்ட நேரடித்தாக்குதலில் இருந்து தன்னைக்காத்துக்கொண்டு மக்களுடன் மக்களாக இயக்க தோழர்கள் மத்தியில் தானும் ஒருவனாக பந்தபாசம் எதுவும் அற்று ஓயாத சேவையாற்றி வரும் சமூகசேவைகள் அமைச்சர் தோழர். டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி கூறுவது போன்று உணர்சிகரமான வெற்றுக் கோசங்களுக்கு இடமளியாமல் நடைமுறைச் சாத்தியமான வழிகளை தெரிந்து கொண்டு செயல் படுவோமேயானால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
புதுவிசை சஞ்சிகையில் ஊடகவியலாளர் கோவை நந்தன்!
யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த கோவை. நந்தன் இனவெறியின் பாசிசத் தாக்குதல்களால் பிறந்தகத்தைப் பிரிந்த அகதி மட்டுமல்ல ஈழப்போராட்ட வரலாற்றில் தவிர்க்கவியலாத ஆளுமையாகவும் தொழிற்பட்டவர். சிங்கள அடக்குமுறைக்கு எதிராக கொதித்தெழுந்த ஆரம்ப காலகட்டங்களில் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் பிரபாகரன் உள்ளிட்டவர்களோடு இணைந்து செயல்பட்டவர். 1970களில் தமிழ் இளைஞர் பேரவையினூடாக சிங்கள அதிகாரத்தை நோக்கி குரலுயர்த்தியதன் விளைவாய் 1976 ஆம் ஆண்டு ஒன்றரைவருட சிறைவாசம் அனுபவித்தவர். 1981 இல் பிரான்சுக்கு புலம் பெயர்ந்த பின்னர் இயக்கச் செயல்பாடுகளின்றி தமது அரசியற்பணிகளை தொடர்ந்து வருகிற நந்தன் ஐரோப்பாவில் தமிழ் ஊடகத்துறையை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணம் வவுனியா வன்னி என இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் கண்டு வந்திருப்பதோடு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக உரையாடியிருக்கிறார். அகதி முகாம்களையும் அப்பாவி மக்களையும் வைத்து இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் அரசியல் களங்களெல்லாம் நாடகமேடையாகிக் கிடக்கும் சூழலில் இலங்கைத்தமிழரின் வாழ்நிலை குறித்து நந்தனோடு உரையாடினோம். அவற்றிலிருந்து
- நேர்காணல் : மீனா
இத்தனை வருடங்களிற்குப்பிறகு பிறந்தகத்திற்க்கு சென்று வந்திருக்கிறீர்கள். இனப்போராட்டங்களின் அதிகாரப் போராட்டங்களின் வெறித்தாக்குதல்களால் மயானக்காடாக மாறிக்கிடக்கும் அந்த மண்ணைப்பார்க்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
இத்தனை வருடங்களின் பின்னர் அந்த மண்ணில் சுதந்திரமாக திரிய முடிகிறதே பேச முடிகிறதே என்கின்ற மகிழ்ச்சியை நான் நானாகவே நாமாகவே எனது இளவயதுவரை திரிந்த அந்த யாழ்ப்பாண மண்ணின் இன்றைய ஒரு வெறுமை இனம்புரியாத ஒரு மயான அமைதி ஆகியன தோற்கடித்துவிட்டன.
கொழும்பிலிருந்து நானும் நண்பர் சுகன் உட்பட 15பயணிகள் பயணித்த அந்தச் சிறிய விமானப்படை விமானம் பலாலி விமானப்படைத்தளத்தில் தரை இறங்கியபோது எனது மனதில் ஒரு பதட்டம் இருந்தது. எம்மை வரவேற்று பஸ் வண்டிமூலம் யாழப்பாணம் வரையான 6மைல் தரைப்பாதையில் பஸ் நிலையம் வரை அழைத்துச்சென்ற அந்த இராணுவ சிப்பாய்களும் அதிகாரி ஒருவரும் அன்பாகவும் பரிவுடனும் எம்முடன் பழகிய விதமானது எனது பதட்டத்தை எனனை அறியாமலே துரத்தி விட்டது.
இவர்களா எமது மக்களை அழித்தவர்கள் என உலகம் பூராவும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள்? என்கின்ற எண்ணத்தை நிச்சயமாக எம்முடன் பயணித்த அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கும். இந்த எண்ணத்துடனும் யாழ் மண்ணின் மணத்துடனும் பஸ்நிலைய பரப்புக்குள் இறங்கிய எனது கண்களுக்கு முதலில் தெரிந்தது மிகவும் பிரமாண்டமாக அங்கே வைக்கப்பட்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிரித்துக் கொணடிருக்கும் ஒரு வண்ணப் போஸ்ரர்தான். அதிலே மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் என்னுள் ஒரு பெரும்நெருடலை ஏற்படுத்தியது.
- ஒரே நாடு ஒரேமக்கள்
இதுதான் மகிந்த சிந்தனை தமிழர்களுக்கு மட்டும் சொல்லும் அந்த வாசகங்கள். இந்த வாசக சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இருப்பதை காணத் கூடியதாக உள்ளது.
இதன் தொனிப்பொருள் என்ன? சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் இது எப்படி அர்த்தப்படுத்தப்படப்போகிறது? எந்த ரூபத்தில் இதன் நடைமுறை இருக்கப்போகிறது? எமது சிந்தனைக்கான இந்த வாசகக்கேள்விகளுடன் 20 வருடங்களின் பின்னரான எனது மண்ணின் பயணம் தொடங்கியது.
இறுதிப்போரின் நிகழ்வுகளும் அதன் தாக்கமும் பெருமளவில் இடமபெற்றிருக்காத யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அழிவின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன என்றால் வன்னி மண்ணின் நிலை எப்படி இருக்கும் என்கின்ற எண்ணம் இவை பூரணமாக பாகுபாடின்றி சீர்செய்யப்படுமா.? அப்படியாயின் இதற்கு எத்தனை வருடங்கள் ஆகும்? என்கின்ற கணக்கீடு இன்றும் இருக்கும் உயர்பாதுகாப்பு வலயப்பிரதேசங்களில் வாழ்ந்ந மக்கள் அப்பகுதிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் அல்லது கிழக்கு மாகாணம் மன்னார் பிரதேசங்களைப்போல இந்தப் பிரதேசங்கள் சிங்கள மயமாகுமா? இப்படியான பல சிக்கலான விடயங்களுக்கு அங்குள்ள அரச அலுவலர்களாலோ அல்லது அங்கு அரச சார்புடன் செயற்படும் தமிழ் ஜனநாயக அமைப்பைச் சேர்ந்தவர்களாலோ விளக்கம் கொடுக்க முடியவில்லை.
யாழ் மாவட்டத்தில் தென்மராட்சிப் பகுதிகளிலேயே ஆங்காங்கே அகதிமுகாம்களும் இடைத்தங்கல் முகாம்களும் காணப்படுகின்றன. இதனுள் வாழு(டு)ம் மக்கள் தமக்கு ஒரு இருப்பிடம் கிடைக்காதா நிம்மதியான நிரந்தர வாழ்வு கிடைக்காதா என ஏங்கிக் கொணடிருக்க அவற்றிற்கு வெளியே ஆட்களற்ற அடித்து நொருகப்பட்ட வீடுகளும் பரந்த பற்றைகள் நிரம்பிய காணிகளும் தம்மைச்சீர் செய்ய இந்த மக்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என ஏங்கிக் கொண்டிருப்பது போல எனது எண்ண ஓட்டம் இருந்தது.
அகதி முகாம்களில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்? அங்கிருந்து பல்வேறு கட்டங்களாக குடியேற்றிக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் மக்களின் நிலை என்னவாக இருக்கிறது?
குடியேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது சரியானது அல்ல. அகதிகளாக முகாம்களில் இருந்த மக்கள் படிப்படியாக அழைத்துச் செல்லப்பட்டு சிறிய நிவராணத்தொகை ஒன்றும் சில அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு அரச சிவில் நிர்வாகத்தின் அடையாளப் பதிவின் பின்னர் அவர்கள் முன்னர் வாழ்ந்த பகுதிகளுக்கும் அவர்களது உறவினர்களின் வீடுகளுக்கும் செல்ல அனுமதிக்கப் படுகிறார்கள்.
யாழ்பாணத்து அகதிமக்கள் அனைவரும் வன்னியை சேர்ந்தவர்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு பூநகரி அகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களில் ஒருபகுதியினரும் இப்படி அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் முகாம்களில் இருந்ததனை விட மகிழ்சியாக இருப்பதாகவே படுகிறது. முகாம்களில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ள ஏனையவர்கள் தாமும் எப்போது வெளிறே அனுமதிக்கப்படுவோம் என்கின்ற எதிர்பார்பிலேயே இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சிலர் வெளிநாடுகளில் இருக்கும் தமது உறவினர்களிடம் இருந்து பண உதவிகள் பெற்று தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்தி கொள்வதனையும் காணமுடிகிறது.
இந்த மக்களின் எதிர்காலம் இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளது. ஏனெனில் இந்த 20 வருட காலப் போரின்போது காலத்திற்கு காலம் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களும் தொடர் இடம் பெயர்வுகளை சந்தித்தவர்களும் கூலி வேலை செய்து அன்றாட பிழைப்பை நடாத்தும் மக்களே ஆகும். இவர்களில் பெரும் பகுதியினர் தலித் மக்கள் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
இவர்களில் வன்னி பெருநிலப்பரப்பை சேர்ந்தவர்களைத்தவிர ஏனையவர்கள் குறிப்பாக யாழ்பாணத்தை சேர்ந்த ஒரு லட்சத்தையும் அண்மித்த மக்கள் தொடரும் காலங்களில் என்ன தொழிலை மேற் கொள்ளப்போகிறார்கள் யார் இவர்ளுக்கான தொழில் வாய்புக்களை வழங்கப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே..
பெருகிவிட்ட இவர்களது குழந்தைகளின் கல்விவாய்ப்பு ஆரோக்கியமான போசாக்குடனான அந்தப்பிள்ளைகளின் எதிர்காலம் இவையும் உடன் விடை காணப்பட வேண்டிய வினாக்களே
வன்னிப் பிரதேசங்களிலேயே வாழ்ந்து வந்த யாழ் மாவட்டத்திலிருந்து 2ம் ஈழ்ப்போருக்கு முன்னர் அங்கு திரத்தியடிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் வவுனியா அகதிமுகாம்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படிப்படியாக அழைத்து வரப்பட்ட வேளை நான் அங்கு தங்கி இருந்தேன். அந்த மக்களில் ஒரு சிலரை சந்தித்து அவர்களுடன் உரையாக்கூடிய வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
அந்த மக்கள் பட்ட அவலம் அவர்களை வழிநாடத்திய மேய்ப்பர்களின் ஆதிக்க சிந்தனையுடனான அடாவடிச் செயல்பாடுகள் அவை ஏற்படுத்திய அழிவுகள் என்றும் மறையாத அதன் வடுக்கள் ஒரு இரவின் பலமணி நேரங்கள் வறண்ட முகங்களுடனும் வற்றிய கண்ணீருடனுமான அந்த விம்மல்கள் இன்றைய இரவுகளிலும் என்னுள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தின் இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களில் ஒருபிரிவினர் தாம் வெளியே சென்று குடியமர்வதற்கு இடமோ அன்றி தமக்கு உறவினர்களோ இல்லாத நிலையில் தாம் தொடர்ந்தும் அந்தந்த முகாம்களிலேயே இருக்க ஆவன செய்யமாறு யாழ் மாவட்டத்திலுள்ள மக்களின் நலன்கள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்ததையும் நான் அங்கு இருந்த சமயத்தில் காணக்கூடியதாக இருந்தது.
ஐந்தாம் கட்ட போராட்டத்திற்கான முழக்கம் ஒருபக்கம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது வரையிலான எந்த ஒரு இயக்க எழுச்சியும் மக்களுக்காக அப்படி எதையும் சாதிக்கவில்லை. சாதிக்க நினைத்தவை அனுமதிக்கப்படவில்லை. மக்களுக்கான உரிமையை இயக்கங்களல்ல மக்களேதான பெற வேண்டும். ஆனால் கெட்டு நொந்து கிடக்கும் ஈழத்தமிழினத்தில் மக்களின் தன்னெழிச்சி என்பது இனிச்சாத்தியமா?
காலணித்துவ ஆட்சிக்காலத்திலும் சரி அதன்பின்னரும் சரி இலங்கைத்தமிழ் மக்களின் தன்னெழிச்சி என்பது மக்களாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எந்தத்தகவல்களும் இல்லை.
வெள்ளைக்கார துரைமார் ஆட்சிக்காலத்தில் தாம் அனுபவித்த சுகபோகங்களையும் சாதரண தட்டு மக்கள் மீதான ஆளுமையையும் 1958 சுதந்திரத்திற்குப் பின்னரும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சேர்.பொன்.ராமநாதன் சேர் பொன் அருணாச்சலம் போன்றவர்களால் தோற்றுவிகப்பட்டு பின்னர் தந்தை.செலவா தலைவர்.அமிர்தலிங்கம் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட வடிவங்களே இறுதியில் புலிகளால் மக்கள் எழுச்சி எனச் சொல்லப்பட்டு சிங்கள் பேரினவாதத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அழிவின் உச்சத்தையும் துயரத்தின் ஆழத்தையும் தாண்டி நாளைய கஞ்சிக்கான எந்தவித உத்தரவாதமும் கூட இல்லாத நிலையில் அந்த மண்ணிலேயே தொடர்ந்தும் வாழும் அந்த மக்களிடையே தன்னெழிச்சி சாத்தியமா என்பது குதிரை முட்டைபோடுமா எனக்கேட்பதைப்போன்றதே.
விடுதலைப்புலிகள் முற்றாக இல்லாதழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற அறிவிப்பின் பின்னர் இன்றைய மகிந்த சகோதரர்களின் அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பிலும் தமிழ்ப்பிரதேசங்கள் தொடர்பிலும் முன்னெடுக்கும் இராஜ தந்திர நகர்வுகளையும் வவுனியா முகாம்களிலுள்ள வன்னிமக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளையும் நோக்கும் போது ஈழத்தமிழினத்தின் மத்தியில் தன்னெழுச்சி என்பது ஏற்படவேண்டும் அல்லது ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தோட்டமே யாழ்மாவட்டத்திலுள்ள படித்த குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இருப்பதனையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
உலகத்தமிழர்களில் பெரும்பாலோரின் மனோநிலையை வெகுவாகப்பாதித்த ஒன்று பிரபாகரனின் மரணச் செய்தி. ஈழத்தமிழர்களை இது எவ்வாறு பாதித்துள்ளது?
இந்தச்செய்தி உண்மையா? பொய்யா? உண்மையானால் இது எப்படி நடந்தது அல்லது நடாத்தப்பட்டது பொய்யானால் அவர் எங்கிருக்கிறார் மீண்டும் அவரது போராட்ட வடிவம் முன்னெடுக்கப்படுமா அது எப்போது இப்படியான பல சந்தேகங்கள் உலகத்தமிழர் மத்தியில் குறிப்பாக புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களிடையே பரவலாக இருக்கிறது.
இப்படியானவர்களில் ஒருசிறு பகுதியினர் தான் புலிகளையும் அதன் தலைமையையும் அவங்கள் எங்கட பொடியள் என விசுவாசமாக நேசித்தவர்கள். ஏனையவர்களில் பெரும்பகுதியினர் தமதும் புலத்தில் வாழும் தம்குடும்பத்தவரினதும் நலத்திற்காகவும் இவர்ளை பகைத்தால் சிக்கல் என்பதற்காகவும் ஆதரவு கொடுத்தவர்கள்.
புலிகளின் அராஜக செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட இப்படியான செயல்பாடுகளை விமர்சித்த ஒரு சிறு பகுதியினர்தான் ஆரம்பம் முதலே புலி எதிர்ப்பளராக இருந்தவர்கள். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்ததும் இவர்கள் தமிழின துரோகி என எனையவர்களால் முத்திரை குத்தப்பட்டதும் நிகழ்வுகள்.
(தொடர்ச்சி மூலப்பிரதி)













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’