எதிர்க்கட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மனித உரிமைகளை பாதூக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடக் கூடிய பின்னணியை ஏற்படுத்துதல் ஜனநாயகத்தின் முக்கிய குணாதிசயங்களில் ஒன்று என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’