வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகா, காற்றோட்டமற்ற அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்


முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா காற்றோட்டமற்ற, ஜன்னல் அற்ற அறை ஒன்றிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதியும், சட்டத்தரணியுமான பி டி குலதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சரத் பொன்சேகா, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறப்பான முறையில் நடத்தப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். என்றால் அவரை சென்று பார்வையிட இராஜதந்திரிகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என குலதுங்க கோரியுள்ளார்.

அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, தமது அமைச்சில் வைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தமை தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை, அவரது மனைவியும் குடும்பத்தினரும் பிரச்சினையின்றி பார்வையிட அனுமதிக்கப்படுவதாக ரோஹித்த போகல்லாகம, தெரிவித்துள்ளமையை குலதுங்க முற்றிலும் பொய்யான தகவல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவை, அவரது மனைவியும் சட்டத்தரணியும் நாளொன்றிற்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, சரத் பொன்சேகா காற்றோட்டமற்ற, ஜன்னல் அற்ற அறை ஒன்றிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி குலதுங்க தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’