வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

போர் இரகசியங்களை அம்பலப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை


போர் இரகசியங்களை அம்பலப்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய சகல அதிகாரங்களும் அரசாங்கத்திற்கு காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தகவல்களை வெளியிடக் கூடாது என்ற அமெரிக்காவின் 793 ம் சட்டத்தைப் போன்றே இலங்கையிலும், போர் இரகசியங்களை அம்பலப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய பூரண அதிகாரம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தைப் போன்றே போர் இரகசியங்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை இலங்கை அரசாங்கத்திற்கும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர், அமெரிக்க தூதரக அதிகாரிக்கு விளக்கமளித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’