-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
தமிழ் காங்கிரஸின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தலைவர் பதவியில் இருந்து விலகினார்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைமைப் பதவியில் இருந்து சட்டத்தரணி அப்பாத்துரை விநாயகமூர்த்தி விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், காங்கிரஸின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு வீட்டில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்து அதில் இருந்து காங்கிரஸின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடந்த இரண்டு கிழமைகளுக்கு முன்னர், விலகினார்.
எனினும், அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் தலைமையில் இருந்த காங்கிரஸின் சின்னத்தின் கீழ், போட்டியிட முடியாத நிலையில் அவர் சுயேட்சையாக குழு ஒன்றை தேர்தலில் போட்டியிட செய்வதற்கான நடவடிக்கைகளி;ல் ஈடுபட்டிருந்தார்.
எனினும், விநாயகமூர்த்தி, தலைமைப்பதவியில் இருந்து விலகியமையை அடுத்து, காங்கிரஸின் தலைமையில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீர்மானம் மேற்கொண்டு அதன் அடிப்படையில் இன்று வேட்புமனுத்தாக்கலும் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கருத்துரைத்துள்ள, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைக் கொள்கைகளான தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கொள்கை என்பவற்றை விட்டு விலகியுள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் போட்டியிடும் யாழ்ப்பாணத்திலும் ( மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்தரன், அப்பாத்துரை விநாயமூர்த்தி) திருகோணமலையிலும் ( சம்பந்தன்) அந்த தலைமைகளை தோற்கடிக்கும் நோக்கிலேயே தாம் போட்டியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’