வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து போட்டி!

எதிர்வரும் சித்திரை மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகின்றன.

இதன் பிரகாரம் இன்றைய தினம் (26) காலை 9.30 மணிக்கு மேற்படி கூட்டணியின் வேட்புமனு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் தலைமை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி கூட்டணியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அதன் முக்கியஸ்தர்க்ள போட்டியிடுகின்றனர்.

இதன் பிரகாரம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முருகேசு கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் வலிகாமம் வலைய அமைப்பாளர் பசுபதி சீவரட்ணம் கி.பி. தென்மராட்சி வலைய அமைப்பாளர் அலெக்ஸாண்டர் சூசைமுத்து சார்ள்ஸ் தீவகப் பகுதி அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் கமல் வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் ரங்கன் முன்னாள் ஹாட்லிக் கல்லூரி அதிபர் முருகுப்பிள்ளை சிறிபதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதே நேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ராமநாதன் ஸ்ரீசரவணபவன் சின்னத்தம்பி மொஹமட் அமீன் ஆகிய நால்வர் போட்டியிடுகின்றனர்.

இன்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இணக்க அரசியலின் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே தான் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.

இதன் போது யாழ் மாவட்ட சமூகப் பெரியார்கள் உட்பட வர்த்தகச் சங்கப் பிரதிநிதிகள் பலரும் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை ஆதரித்து கருத்து கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.










0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’