-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெள்ளி, 26 பிப்ரவரி, 2010
கொழும்பு தேர்தல் களத்தில் 22 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள்;16 சுயேட்சைக் குழுக்கள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென கொழும்பு மாவட்டத்தில் 22 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 16 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள் இன்றாகும். இன்றைய தினம் சில முக்கிய அரசியல் கட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் பலர் தேர்தல்கள் செயலகத்துக்கு வருகை தந்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த இரண்டு சுயேட்சைக் குழுக்களின் மனுக்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பில் பல்வேறு அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தமிழ் வேட்பாளர்கள் பலர் இம்முறை போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’