
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றுத் தலைமை ஒன்று தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ள அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா, கட்சியை உள்ளிருந்தே அழிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரிலே "வேட்பாளர் தெரிவுக்குழு' என்று கூறிக்கொண்டு, ஒரு சிலர் ஒன்று கூடி முடிவுகளை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நியமனம் வழங்கப்பட மாட்டாது என்றும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அந்தப் பட்டியலிலேயே என்னுடைய பெயரும் இடம்பெற்றிருக்கிறது என நான் அறிகிறேன். இதையிட்டு நான் அலட்டிக்கொள்ள விரும்பவில்லை.
அவர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிடட்டும். எங்களுடைய பதில் என்னவென்பதைத் திட்டவட்டமாக அந்தத் தேர்தலிலே வெளிப்படுத்த நானும், நண்பர் சிவாஜிலிங்கமும் தயாராக இருக்கிறோம்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றுத் தலைமை ஒன்று தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்று தேவைப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்ளிருந்தே அழித்தொழிக்கும் முயற்சியை சிலபேர் மேற்கொண்டிருக்கின்றார்கள். இதை ஓர் அரசியல் சவாலாக நாங்கள் சந்திப்போம். என அவர் குறிப்பிட்டுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’