வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 18 பிப்ரவரி, 2010

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்பவர்களிடமிருந்து இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டில் ஆயுதக்களைவை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் ஆனந்தசங்கரி வேண்டுகோள்.


தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான ஆனந்தசங்கரி 2020ம் ஆண்டில் சட்டப்படி அதிகாரங்கள் இல்லாதவர்களிடமிருந்து ஆயுதங்கள் களையப்படவேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13-02-2020 என திகதியிடப்பட்டு ஆனந்தசங்கரியினால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படும் ஜனாதிபதி அவர்களே தமிழ் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது என்ற தலைப்பிலான கடிதத்திலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதமானது வழமைபோலவே அனைத்து சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். ஓரிரண்டு இணையத்தளங்கள் 2020ம் ஆண்டு என திகதியிடப்பட்ட ஆனந்தசங்கரியின் மேற்படி கடிதத்தை அப்படியே வெளியிட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’