
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் புத்திசாதுரியமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள தேர்தல் சகல மக்களுக்கும் மிகவும் முக்கியமான தேர்தலாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ், முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு கிழக்கு மக்கள் சில அரசியல் சதிகாரர்களின் சதி வலையினால் எதிர்க்கட்சிக்கு ஆதரவளித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் சேவையாற்றுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’